வாதிரியார் என்போர் யார் ?
மள்ளர் சமூகத்தின் ஒரு பிரிவாக வாதிரியார் பட்டம் தாங்கிய மக்கள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மற்ற மாவட்டங்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சில கோவில்களில் முதல்மரியாதையையும் பெற்று வருகின்றனர்.
********************
இவர்கள் பன்டைய காலத்தில் நெசவு தொழிலில் மிகவும் வல்லமை படைத்வர்கள் என கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலூ கூறுகிறார்.அது மட்டுமின்றி இந்த வாதிரியார்கள் நெய்யும் துணி பெயர் பள்ளா என்று கீரேக்கத்தின் வரலாறு குறிப்பிடுகிறது
************************
“உழு தொழில் வல்ல #மள்ளர் #கோலிய வுறிவி னாக்கம்“
எனத் தொடங்கும் தியாகராயலீலைச் செய்யுள் (101) மள்ளர்களின் உழு நேர்த்தியை நெசவோடு உவமிக்கும். இதனை முனைவர் குருசாமி சித்தர் “தமிழ் இலக்கியத்தில மள்ளர், தேவேந்திர குல வேளாளர்” எனும நூலில் (பக்கம் 114) கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.
“உழவுத் தொழில் வல்லுநர்களான மள்ளர் இனத்தார் செழிப்பான நிலத்தை வளாவெடுத்த புதுத் துணி நெய்வது போல் உழுது சம்பாதிக்கின்றனர்”
இவர்களைதான் பழனி செப்புபட்டையத்தில் நெசவு செய்யும் வாதிரியார் உற்பத்தி செய்யும் துணியை சாயம் ஏற்றுபவர் வாதிரியாரின் உட்பிரிவு "சாயப்பள்ளன்" என்று கூறுகிறது. இவர்கள் தாமிரபரணி ஆற்றாங்கரையில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உழவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கலை சீரும் சிறப்புமாக வழிபட்டு வருகின்றனர், இவர்கள் தங்களை கோழியப்பள்ளர் என்றும் சொல்வர். இவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் மிகவும் சிறப்புக்குரியவை.
சூடாமணி நிகண்டு இரண்டாவது மக்கட்பெயர்த்தொகுதி, செய்யுள் 120 ல் கீழ்கண்ட விளக்கம் இடம்பெற்றுள்ளது.
(இது கிள்ளி என்ற சோழ மன்னனை பற்றியது)
கோழி = கோழியூர் = உறையூர்,
வேந்தன் = அரசன்
கோழிவேந்தன் = உறையூரை தலைநகரமாக கொண்ட அரசன்
இந்த உறையூர் என்பது சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.
இங்கு வாழ்ந்த சோழியபள்ளர்தான் கோழியபள்ளராக மருவியுள்ளார்கள் என எழுத்தாளர் தமிழ்மாறன் கூறுகிறார்.
பேராசிரியா் நா. வாணமாமலை
“பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வௌ்ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில் சிலர் வௌ்ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வௌ்ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”
(வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14)
வாதிரியார் பத்திர ஆவணங்கள் பற்றி பார்ப்போம் :
1884 ஆண்டு :
பத்திர பதிவு
1931 ஆண்டு :
(31-08-1931 ) வாதிரியார் பள்ளர் சாதி என்ற பத்திர பதிவு.
1936 ஆண்டு :
வாதிரியார் குடும்பன் என்று அன்றய பிரிட்டிஷ் அரசு முத்திரை stamp உள்ளது.
1946 ஆண்டு :
1950 ஆண்டு :
தேவேந்திர குல விவசாயம் , வாதிரியான் .
1954 ஆண்டு :
பத்திர பதிவு குடும்பன் வாதிரியார் என்ற பதிவு
1956 ஆண்டு :
Vathiriyar is the subcaste of pallan.
1956ஆம் ஆண்டு வாதிரியார், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் உட்பிரிவு என்று தமிழ்நாடு சமுக நலத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
வாதிரியார் சமூகம் பள்ளரின் உட்பிரிவு என்று அரசு சான்றிதழ்
1961 ஆண்டு :
CENSUS OF INDIA VOLUME IX MADRAS
1967 ஆண்டு :
கிபி 1967 ல் பள்ளர்களை பட்டியலில் சேர்த்த அரசின் சட்ட திருத்த மசோதாவில் பள்ளர்களின் உட்பிரிவாக வாதிரியார் அரசு ஆவணங்களில் உள்ளது
1968 ஆண்டு :
GOVERNMENT OF KERALA GAZETTE 1968
பள்ளரின் உட்பிரிவாக பண்ணாடி ,வாதிரியார்
#Pallan-#Vathiriyanpallan :pallar ,pannadi , vathiriyan ,vathiriyar.
அதில் பள்ளர்களின் ஒரு பிரிவாக வாதிரியார் சேர்க்கப்பட்டுள்ளதற்கான அரசு ஆவணங்களையும் பாத்திரங்களையும் பார்த்து இருப்பீர்கள். இப்போது நேரடி மக்களிடம் களஆய்வு பற்றி பார்ப்போம்.
திருநெல்வேலி,நெல்லை , தூத்துக்குடி மற்றும் மற்ற மாவட்டங்களிலும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். உதாரணமாக இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் "தேவேந்திர குல வேளாளர்" வாதிரியார் சமூகம் பெரும்பான்மையாக வாழும் கிராமங்கள்.எண்ணிக்கை மட்டும் மக்கள் தொகை.
வ. ஊர் கோலிய குடும்பம் மொதொ எண். வாதிரியார். NOS NOS
1.சிவந்திப்பட்டி. 1000 5000
2.பருதிப்பாடு. 60 300
3. பொட்டல். 500 2000
4. படப்பக்குறிச்சி. 600 2500
5.வெள்ளக்கோவில். 300 1300
6.V.M. சத்திரம். 100 500
7.குறுந்துடையார்புரம். 50 200
8.மேலச்செவல். 200 1500
9.பொழிக்கரை. 50 200
10.வீரவநல்லூர். 700 3000
11.கூனியூர். 100 4500
12.புதுக்குடி. 70 300
13. காருக்குறுச்சி. 100 400
14.மாவடி. 70 300
15. கீழப்பத்தை. 200 800
16.வடகரை. 150 600
17.V.K. புரம்
நட்டப்புளித் தெரு. 170 700
18. சக்திகுளம். 100 400
19.உதையமார்தாண்டபுரம். 100 400
20. சிங்கிகுலம். 70 300
21. ராஜகுடியிருப்பு. 150 600
22.முக்கூடல். 100 400
23.சடையபுரம். 150 600
24. மகிழபுரம் 150 600
25. பத்மநாதபுரம். 100 400
26.ஆலடியூர். 50 200
27. செட்டிமேடு. 70 300
28.மருதூர்
(கோமந்தாநகர் ) 100 400
29.சக்கம்மாள்புரம் 100 400
30. நொச்சிகுலம். 100 400
31.காட்டுப்பச்சேரி. 50 200
32.பாளையம். 100 400
33.வீரபாண்டியன். 150 600
34. ரெங்கநாதபுரம்
(டவுன்). 100 400
35.நாகம்மால்புரம். 100 400
36. வீரராகவபுரம். 100 400
______________
31900
வாதிரியார்களில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளது, அதற்குள் ஆழமாக செல்வதை விட நமக்கான பனிக்குள் வருவோம்.
வாதிரியார் என்ற பெயரில் உள்ள அனைவரும் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் வேண்டாம் என்று சொல்வது போல் மாயை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்டங்களில் நாட்டார் என்ற பட்டப் பெயரை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பயன்படுத்துகிறார்கள். இதில் கோலிய நாட்டார் (கோலிய பள்ளர்) என்ற பிரிவில் உள்ள சுமார்50கிராமங்கள்வாதிரியார்-பள்ளன்-தேவேந்திரகுலம்-இந்திரகுலம் என்றே பதிவு செய்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கிராமத்தில் வாழும் வாதிரியார்களில் இரண்டு மன நிலை உள்ளது. ஒன்று நாம் தேவேந்திரகுல மக்களுடன் சேர்ந்து இருப்பது, தனித்து வாதிரியார் என்ற பெயரில் வாழ்வது.
வாதிரியார்கள், தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் பதிவு செய்ய விரும்பும் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் வாழ்பவர்களை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டுள்ளோம்.
மேலே வாதிரியார்கள் தேவேந்திர குல வேளாளர் என்ற ஒருங்கிணைந்து ஒற்றைபெயரில் இன்றைய விருப்பம் தெரிவித்து கையெழுத்து இட்டுள்றனர்.
இதற்குள் வர விரும்பாதவர்களை நாம் இணைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.
ஆனால் வாதிரியார் என்ற பெயரை பதிவு செய்யக் கூடாது. வாதிரியார்களில் இந்தப் பிரிவைச் சேர்ந்த எங்களை சேர்க்காதீர்கள் என்று சொல்லட்டும்.
உதாரணத்திற்கு கடையர் என்ற பெயரில் மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இதே போல் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் கடையன் என்ற பிரிவில் பனை தொழில் செய்கிறார்கள். இவர்கள் தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவாக நாம் சொல்லவில்லை. அவர்களும் சொல்லவில்லை.
எனவே வாதிரியார் பிரிவில் இந்த பட்டத்திற்கு உட்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளராக வராது என்று குறிப்பிட்டு சொல்லட்டும்.
தமிழகத்தில் மூப்பன், சேர்வை, பிள்ளை, அகம்படியார் என்று பல பெயர்கள் பல சாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.இதனால், எல்லாப் பெயர்களும் ஒரு சாதிக்குள் வந்து விடாது. ஒரே சாதி என்றும் சொல்ல முடியாது.
சில நிலபத்திரங்களை ஏற்கனவே மேலே பதிவு செய்துள்ளேன்.
அதில் வாதிரியார்-இந்திரகுலம் என்றும் விவசாயம் என்றும் வருகிறது.
சுமார் 30,000 மக்கள் தொகை கொண்ட வாதிரியார்கள் ( ஒரு சில பிரிவுகள் ) தனித்த அடையாளத்தில் இருக்க விரும்புவதை ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் தங்களை சரியாக அடையாளபடுத்தி அரசுக்கு விண்ணப்பம் செய்வதை நாம்எதிர்க்கவில்லை .
வாதிரியார் என்ற பெயரை இணைக்க கூடாது என்று சொல்வதை இவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .
கையெப்பமிட்ட வாதிரியார்களின் படங்கள்