சமுதாயக் கொடி சமுதாயத்திற்கே சொந்தம்.
பாண்டியர்களாக "மீன்" கொடியோடும்..
சோழர்களாக "புலிக்" கொடியோடும்..
சேரர்களாக "வில்" கொடியோடும் வாழ்ந்த, மூவேந்தர் மரபில் வந்த "மள்ளர்" எனும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய முன்னோர்களால் 1810 ஆம் ஆண்டு "சமுதாயக் கொடி" முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது..
04.07.1929 அன்று "கொடி வேந்தர்" தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்களால் "போர்" தொழிலின் அடையாளமான சிகப்பு நிறத்தையும், "ஏர்" தொழிலின் அடையாளமான பச்சை நிறத்தையும் குறிக்கக் கூடிய வகையில் "சிவப்பு -பச்சை" கொடி உருவாக்கப்பட்டு சமுதாய கொடியாக வெளியிடப்பட்டது..*
1936 ஆம் ஆண்டு "சிவப்பு - பச்சை" கொடியுடன் "கோட்டூரில்" முதல் மாநாட்டைத் தேக்கம்பட்டியார் அவர்கள் நடத்தினார்கள்..
03.08.1936 அன்று "தேவாரத்தில்" நடைபெற்ற இரண்டாவது சமுதாய மாநாடு தேக்கம்பட்டியார் அவர்கள் தலைமையில் சிவப்பு - பச்சை கொடியுடன் நடைபெற்றது..
29.12.1946 அன்று தேக்கம்பட்டியார் தலைமையில் "மதுரையில்" நடைபெற்ற மூன்றாவது சமுதாய மாநாட்டிலும் சமுதாய "சிவப்பு - பச்சை" கொடி பயன்படுத்தப்பட்டது..
11.05.1951 அன்று "கொடி வேந்தர்" தேக்கம்பட்டியார் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை நிலை அடைந்தார்கள்..
"கொடி வேந்தர்" தேக்கம்பட்டியார் வழியில் பயணித்த தியாகி இமானுவேல் சேகரனார், பேரையூர் பெருமாள் பீட்டர், கர்னல் தேவதாஸ் போன்ற சமுதாயப் பெரியவர்கள் சிவப்பு பச்சை கொடியுடன் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்..*
*1967 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட "தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் சங்கம்" என்ற சங்கத்தின் கொடியாகச் சிவப்பு - பச்சை கொடியை நெல்லை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய முன்னோர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.. இந்த சங்கத்தின் பதிவு எண் 58 /ஆண்டு 1967..*
1969 ஆம் ஆண்டு மே மாதம் 24, 25 ஆம் தேதிகளில் நெல்லை சங்கீத சபாவில் "தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்க மாநாடு" நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..*
*இந்த மாநாட்டின் "அழைப்பிதழில்" சிவப்பு - பச்சை கொடியின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது..*
இதன் பதிவு எண் 73 / ஆண்டு 1983தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கம் என்பதனைப் பதிவு செய்து இருக்கின்றார்கள்.. கொடியும் "சிவப்பு - பச்சையே" ஆகும்.
*28.02.1982 அன்று நெல்லை பகுதியில் மாபெரும் மாவீரராக, "களப்போராளியாக" வலம் வந்த சகோதரர்*
*"திரு. செல்லத்துரை பாண்டியர்" அவர்கள் சமுதாய உள் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.. அவரும் "சிவப்பு - பச்சை" கொடி ஏந்தியவரே..*
*சகோதரர் "திரு. செல்லத்துரை பாண்டியரின்" மரணத்திற்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் இளைஞரணி தலைவராகச் சமுதாயப் பணிக்கு வந்த "நெல்லை நெப்போலியன்" திரு. ஜான்பாண்டியன் அவர்கள் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் "சிவப்பு - பச்சை" கொடியை ஏற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் என்றால் அது மிகையல்ல..*
*05.03.1989 ஆம் ஆண்டில் மதுரையில் "டாக்டர் ராமதாஸ்" மற்றும் தலைவர் "ஜான் பாண்டியன்" அவர்கள் தலைமையில் நடைபெற்ற மள்ளர் - வன்னியர் "ஒரு தாய்" மக்கள் மாநாட்டில் தேவேந்திரர்கள் "சிவப்பு - பச்சை" கொடியுடனும்,
*12.10.1991 அன்று மதுரை தல்லாகுளம் பெரியார் மாளிகையில் அனைத்துத் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது..* *இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக "டாக்டர் ராமதாஸ்" அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான "திரு. ஜான் பாண்டியன்" அவர்களும் கலந்து கொண்டனர்..*
*இந்தக் கூட்டத்திலும் "சிவப்பு - பச்சை" கொடி பயன்படுத்தப்பட்டது..*
*1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் "பொள்ளாச்சி" நாடாளுமன்ற தனித் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் "திரு. கிருஷ்ணசாமி" அவர்கள் போட்டியிட்டார்கள்.*
*இந்தத் தேர்தலில் "அண்ணா நம்பி" என்கிற அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்..*
*1989 ஆம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து பணியாற்றி வந்த டாக்டர் திரு. கிருஷ்ணசாமி அவர்களின் கோவை "சங்கீதா" மருத்துவமனையை அன்று தமிழக முதல்வராக இருந்த "திரு. கருணாநிதி" அவர்கள் திறந்து வைத்தார்கள்..*
*12.10.1991 மதுரை தல்லாகுளத்தில டாக்டர் திரு. ராமதாஸ் மற்றும் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டாக்டர் "திரு. கிருஷ்ணசாமி" அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.. அன்று அங்கு சமுதாயக் கொடியாகிய "சிவப்பு - பச்சை" கொடியே பட்டொளி வீசிப் பறந்தது.
மாலை முரசு செய்தி 13.10.1991*
*1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் தூத்துக்குடி , சிதம்பரநகரில் உள்ள தொலைபேசி பூத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாவீரர் "திரு. பசுபதிபாண்டியன்" அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது..*
*இந்தத் தாக்குதலில் பசுபதி பாண்டியனாரின் நண்பர் "திரு. பொன் இசக்கி" அவர்கள் இறந்தார்கள்..*
*1993 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சூடு, வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவீரன் திரு. பசுபதி பாண்டியனார் அவர்களைப் பார்ப்பதற்காக "டாக்டர் திரு. கிருஷ்ணசாமி" அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார்கள்..*
*தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பசுபதிபாண்டியன் அவர்கள் சிகிச்சை பெற்று வந்தால் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ.? என்று சமுதாய மக்கள் அஞ்சி வந்தனர். அந்த நேரத்தில் டாக்டர் திரு. கிருஷ்ணசாமி அவர்கள் திரு. பசுபதிபாண்டியன் அவர்களைத் தனக்குச் சொந்தமான கோவை "சங்கீதா" மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்துக் காப்பாற்றினார்கள்..*
*மாவீரன் பசுபதி பாண்டியன் அவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியதன் மூலமாக "டாக்டர். கிருஷ்ணசாமி" அவர்களுக்குச் சமுதாயத்தில் மதிப்புக் கிடைத்தது..*
*31.08.1995 நடைபெற்ற கொடியங்குளம் கலவரம் மூலமாகச் சமுதாயப் பணிக்கு "டாக்டர். கிருஷ்ணசாமி" அவர்கள் முழுமையாக வந்தார்கள்..*
*இந்த நேரத்தில் பல்வேறு தடைகளை, உயிர் அச்சுறுத்தல்களை மீறிச் சமுதாயச் சிவப்பு-பச்சை கொடியைக் கடைக்கோடி கிராமங்களிலும் ஏற்றி வைத்த தலைவர்களான "திரு. ஜான்பாண்டியன்" மற்றும் "திரு. பசுபதிபாண்டியன்" போன்றவர்கள் சிறையில் இருந்தனர்..*
*1995 ஆம் ஆண்டு நடைபெற்ற "கொடியன்குளம்" கலவரத்திற்கு பிறகு தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மத்தியில் "பெரிய எழுச்சி" உருவானது..* *தலைவர்கள் இருவரும் சிறையில் இருந்த காரணத்தினால் சமுதாயத் தலைவர்களும், மக்களும் காலங்காலமாக ஏந்திய சமுதாயத்தின் "சிவப்பு-பச்சை" கொடியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் அணி திரண்டனர் ..*
*1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கொடியன்குளம் கிராமத்தை உள்ளடக்கிய "ஒட்டப்பிடாரம்" சட்டமன்றத் தொகுதியிலிருந்து "டாக்டர். கிருஷ்ணசாமி" அவர்கள் முதன் முறையாக வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள்.*
*டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்ந்த அரசியல் பணிக்கு வருவதற்கு முன்பே சமுதாய மக்கள் சிவப்பு பச்சை கொடியைப் பயன்படுத்தி வந்தனர் என்பது உலகறிந்தது..*
*"சிவப்பு-பச்சை" கொடி என்பது தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் "வாழ்வியலோடு" கலந்தது. பொங்கல் விழாவில் உழவு மாடுகளின் கொம்புகளில் தாங்கள் சார்ந்த கட்சிக் கொடி வண்ணங்களைப் புறந்தள்ளிச் சமூகக் கொடியின் வண்ணமாகிய "சிவப்பு - பச்சையையே" தீட்டினார்கள். அந்த அளவிற்குச் சமூக மக்களிடம் பிரிக்க முடியாத நிலையில் உணர்வோடு கலந்து விட்டது சிவப்பு பச்சை நிறமும் கொடியும்.. இதனைப் பயன்படுத்த கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை..*
*காடு மேடு திருத்திக் கழனியாக்கிப் பாடுபட்ட உழவர் சமூகத்தின் பல ஆண்டுகளின் உழைப்பும் பயன்பாட்டு உரிமையும் ஊரறிந்தது...*
*அவர்களிடம் ஆவணம் இல்லை என்ற அவர்களின் அறியாமைத் தவறால் திடீரென்று வந்த ஒருவர் பட்டாப் போட்டு உரிமை ஆக்கிக் கொண்டால் - அது சரியா? ஆவணம் இல்லாமல் இருக்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லி அவர்கள் பேரில் ஆவணம் பெற ஆவன செய்ய வேண்டும்...*
*அது தான் அக்கறை, நேர்மை. அதை விட்டு விட்டுத் தன் பெயரில் பட்டாப் போட்டுக் கொள்வது எப்படி நேர்மையாகும்? அது போலத்தான் சிவப்பு பச்சை கொடியின் உரிமையும்..*
*நாயக்கர் காலத்தின் நில உடைமை பறிப்புப் போலவே இந்தக் கொடி உரிமைப் பறிப்பும் இருக்கிறது...*
*தலைவர்கள் தேவைப்பட்டால் சமுதாயக் கொடியான "சிவப்பு - பச்சை" கொடியைத் தவிர்த்துத் தங்களுக்கான புதிய அடையாளக் கொடியை உருவாக்கிக் கொள்வது "சமூகத்திற்கு" நல்லது..*
*மள்ளர்*
*2021*