செட்டிக்குளம் உரிமை மீட்பு - தேவேந்திர குல வேளாளர் வரலாறு
பெரம்பலுரிலிருந்து திருச்சி செல்லும் முதன்மை சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் தண்டாயுதபாணி திருக்கோவில் மலை மீது உள்ளது.
இந்தக் கோவிலில் கோழிக் கொடியோன் கோவில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு மட்டும் பாத்தியப்பட்டதாக இருந்து வந்தது. அதுமட்டுமின்றி சேகர் பண்டாரம் பள்ளர்/மள்ளர்/தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் செப்பேடு கூறும் பள்ளத்தான்டவ பண்டாரம் மற்றும் சுப்ரமணியம் பண்டாரம் ஆகியோரின் வழி வந்தவராவார். இவர்கள் இந்த கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூசை செய்யும் உரிமை உடையவர்களாவார்.
செப்பேடு ஆவணம் :
முன் பக்கம்
பட்டயத்தின் பின் பக்கம்
செப்பேட்டில் உள்ள வரிகள்
இந்த உரிமையை பறிக்க நடந்த முயற்சியை தடுக்க 1934-ல் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதி மன்றத்தில் இம்மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதன் தீர்ப்பு 17-10-1936-ல் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது . இதன் மூலம்
கோழிக் கொடியோன் (சேவல் கொடியோன்) உரிமை
இந்தக் கோவிலுக்கு வரும் முடி காணிக்கை கோவில் மணி , உண்டியல், தண்டாயுதபாணி கோவில் தென்புறத்து படிக்கட்டு ஆகியவை தேவேந்திரகுல வேளாளர்ளுக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது
இத்தீர்ப்பின் முதல் பக்கத்தில் வழக்கு தொடர்ந்த இம்மக்களின் பெயருக்கு பின்னால் மூப்பன் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .
இவர்களை “ தேவேந்திரகுல மக்கள் ’’ என்று குறிப்பிட்டுள்ளது . ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் பள்ளன் என்று பதிவு செய்யாமல் தேவேந்திரகுலம் என்று பதிவு செய்துள்ளது. இந்த தகவல் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு ஆவணம் .
1937-ல் மார்ச்சு 27 அன்று தண்ணீர் பந்தல் அமைக்க தண்டாயுதபாணி மலை கோழிக்கொடியோன் சாமி ஆதினபரம்பரை தேவேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தின் தீர்மானம் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளர்கள்.
1937-ல் இம்மக்கள் அச்சு பதித்த அழைப்பிதழில் தேவேந்திரகுல வேளாளர் என்றே தங்களை அழைத்துக்கொண்டனர் என்பது ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது .
தொல்லியல் துறை ஆவணங்கள் :
நன்றி 🙏