ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய கருங்கற் சிலை: கோவை புலியகுளம் விநாயகர்!
கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டிற்கு சிறப்பு வாய்ந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒன்று தேவாலயம் மற்றொன்று புலியகுளம் விநாயகர் கோவில்.
கடந்த 1982ம் ஆண்டு தேவேந்திர குல அறக்கட்டளையால் (சோழிய பள்ளர் பிரிவு ) ஆதாரம் பழனி பட்டத்தில் இவர்களை பற்றிய குறிப்பு உள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் சமூக ஊரில் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது. இந்தக் கோவில் புலியகுளம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த துணைக்கோவிலாகும்.
இங்கு வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றுமுதல் இன்று வரை இக்கோவிலில் முதல்மரியாதையும்
பரிவட்டமும் தேவேந்திர குல வேளாளர்களுக்கே இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது.
( இது சிலை வடிவமைக்கப்படுமுன்
எடுக்கப்பட்ட பழைய புகைப்பட பதிவு.)
அரசு ஆவணங்களில் பதிவு செய்துள்ளது
சோழிய பள்ளர்கள் இக்கோவில் கட்டியதால் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயருடன் "சோழிய" பெயரை தேவேந்திர குல சோழிய வேளாளர் என்று கல்வெட்டுகளிலும் இந்து அறநிலையத்துறையிலும் பதிவு செய்துள்ளனர்.