சித்திரமேழி பெரிய நாட்டர்

சித்திரமேழி நாட்டார் யார் :

ஆதியில் மனிதர்கள் நாடோடிகளாக மலையிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த காலக்கட்டத்தில் மள்ளர்கள் மட்டும் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சமவெளியில் பயிர்த்தொழிலில் செய்து தன் உறவினர்களுடன் நிலையாகத் தங்கி குடும்பமாக வாழ முற்ப்பட்டனர். அவ்வாறு தங்கிய இடத்திற்க்கு ஊர் என்றும் நாளடைவில் இவ்வூர் சிற்றூர், பேரூர், மூதூரும் ஆகி, கைத்தொழிலும் வாணிகமும் வளர்ந்தது. இவர்கள் ஊர்கள் தோரும் ஊர் சபை (கிராம சபை) ஏற்ப்படுத்தி தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டனர். 
இச்சபைக்கு ஊர்க் குடும்பன் தலமையேற்றான். ஆதலால் அந்த அமைப்பு குடும்பு என்று அழைக்கப்பட்டது. ஊர்சபை பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு அக்குடும்புக்கு உரிய தகுதி உடையவர்களை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து குடியாட்சி செய்தனர். இதன்படி தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், நில வாரியம், நீர் வாரியம், கழனி வாரியம், களிங்கு வாரியம். சம்வத்ஸர வாரியம் எனப் பல வாரியங்களுக்கு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
             
         இவர்கள் அரசுக்குச் சேரவேண்டிய வரிகளையும் மக்களிடமிருந்து வசூலித்து அரசுக்குச் செலுத்தி வந்தன. இச்சபை அன்றைய வேந்தர்களின் நேரடி மேற்ப்பார்வையில் செயல்பட்டது என்பதை சோழ மன்னர் தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பாரந்தக சோழர் காலத்தில் எழுதப்பட்ட உத்திரமல்லூர் கல்வெட்டுகள் உறுதி செய்வதுடன் அந்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்கள் யார்? என்பதை குறிப்பிடுகிறது.

தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்

உத்திரமல்லூர் கல்வெட்டு - 1
x----------x------------x-----------x
1) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.

2) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.

3) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.

4) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.

5) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம்செய் தொழிந்த பெருமக்களுக்கு

6) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு

7) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பேதோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை

8) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம் ஆ

9) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டுகுடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு

10) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத

11) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட

12) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.

உத்திரமல்லூர் கல்வெட்டு - 2 
x----------x------------x-----------x
1) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ

2) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா

3) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பா

4) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை

5) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்

6)தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்

7) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம் 

8) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக

9) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா

10) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே

11) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்

12)வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்

13)கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.

14) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர்பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செய்

15) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண

16) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாகதேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா
17) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்
18) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.

(Archaeological Survey of lndia - Annual Report 1904 - 1905 pp 136 - 142._)

இவ்வாறு அக்காலத்தில் கிராமசபை ஏரி வாரியம், தோட்டம் வாரியம், நில வாரியம், நீர் வாரியம், கழனி வாரியம், களிங்கு வாரியம் போன்ற பல குடும்புகளாகப் பிறித்து அதற்க்குத் தலைவர்களை குடவோலை முறையில் தேர்வுசெய்து செயல் பட்டதுடன் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகளும் வழங்கி கிராம சபையை தத்தனூர் மூவேந்த வேளான் போன்ற வேளாண் குடி தலைவர்கள் திறம்பட நடத்தி வந்துள்ளதை உத்திரமல்லூர் கல்வெட்டுகள் தெளிவு படுத்துகின்றன. 

உத்திரமல்லூர் கல்வெட்டுகளை ஆய்வு செய்த முன்னால் தொல்பொருள் ஆய்வு துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் மூவேந்தர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த கிராம சபையில் அங்கத்தினராக இருக்க தகுதியுடையவர்கள் யார்?, தகுதியற்றவர்கள் யார்? என்பதை கீழ்கண்டவாறு பட்டியல் இடுகிறார். 

தகுதியுடையார்:
-----xxx-----xxx------
1. கால் நிலத்துக்கு மேல் அரை நிலமுடையான்,
2. தன் மனையிலே அகம் எடுத்துக் கொண்டு இருப்பான்,
3. எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டான்,
4. மந்திர பிராம்மணம் வல்லான்,
5. ஓதுவித்தறிவான், அல்லது
6. அரைக்கால் நிலமே உடையான் ஆயினும் ஒரு வேதம் வல்லானாய், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்கணித்து அறிவான்,
7. அவர்களிலும் கார்யத்தில் நிபுணன்,
8. ஆசாரம் (ஒழுக்கசீலம்) உடையான்,
9. அர்த்த செளசமும் (பொருள் சுத்தம்) ஆன்ம செளசமும் (மனச் சுத்தம்) உடையான்,
10. மூவாட்டன் இப்புறம் வாரியம் செய்திலான், பெயர் தீட்டி குடம் புக இடுவதாகவும்.

தகுதியற்றோர்:
-----xxx-----xxx------
1. எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்குக் காட்டாது இருந்தான்,
2. இவர்களுக்கு சிற்றவை பேரவை மக்கள்,
3. இவர்களுக்கு அத்தை மாமன் மக்கள்,
4. இவர்களுக்கு தாயோடு உடன் பிறந்தான்,
5. இவர்கள் தகப்பனோடு உடன் பிறந்தான்
6. தன்னோடு உடன் பிறந்தான்,
7. இவர்களுக்குப் பிள்ளை கொடுத்த மாமன்,
8. இவர்கள் பிராம்மணியோடு உடன் பிறந்தாளை வேட்டான்,
9. உடன் பிறந்தான் மக்கள்,
10. தன் மகள் வேட்ட மருமகன்,
11. தன் தமப்பன்,
12. தன் மகன்,
13. அகம்யாகமனத்திலும் மகாபாதகங்களில் முன்படைந்த நாலு மகாபாதகத்திலும் எழுதப்பட்டான்,
14. சம்ஸர்க்கப்பதிதரை பிராயச்சித்தம் செய்யும் ஆள்,
15. சாஹஸியராய் இருப்பான்,
16. பர திரவ்யம் அபகரித்தான்,
17. அப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்,
18. கிருத பிராயசித்தம் செய்து சுத்தன் ஆனான்,
19. பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனான்,
20. கிராம கண்டகராய் பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனான்,
21. அகம்யாகமனம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்
(உத்திரமேரூர் கல்வெட்டுகள்) - டாக்டர் இரா. நாகசாமி முன்னால் இயக்குநர் தொல்பொருள் ஆய்வு துறை)

விவசாய பெருங்குடி மக்கள் வாழ்ந்த பல ஊர்கள் சேர்ந்தது நாடு என அழைக்கப்பட்டது. அது பின்பு பல நாடுகள் சேர்ந்து பெரிய நாடு, பெரிளமை நாடு என்று விரிவு பெற்றது. உழவுத் தொழிலில் ஈடுபட்ட மள்ளர்கள் நாட்டின் வருவாய்த் துறை நிர்வாகங்களை கவனித்தல் போன்ற பணிகளைச் முறையாக நிர்வகிக்கும் பொழுது அவர்கள் நாட்டார், நாடாள்வார் என்றும் பெயர் பெற்றனர். பல நாடுகளின் நாட்டார்கள் இணைந்து ஏற்படுத்திய பேரமைப்பு பெரியநாடு அல்லது சித்திரமேழிப் பெரியநாடு ஆகும். இவர்களே பின்பு பெரிளமை நாட்டார் என்றும் சித்திரமேழி நாட்டர் என்றும் சித்திரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர். 

மூவேந்தர் ஆட்சி காலத்தில் வேளாண்குடிகள் நடத்திய கிராம சபை அல்லது நாட்டார் சபையின் தலைவர்களாக மள்ளர் சமூகத்தின் உட்பிறிவுகளான குடும்பர் மற்றும் கரையார்(கரையாளர்) இருந்ததாக மூன்றாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

Tirubhuvanachakravartin Rajaraja (III) A.D. 1232.
x---------x----------x---------x---------x---------x

States that on the representation made by the nattavar of three nadus, the kudumbar and the karaiyar, the great assembly met in the Pugalabharana-Vinayakap-pillaiyar temple at Rajasikhamani-chaturvedimangalam, a village in Tiruvindalurnadu, a subdivsion of Rajadhiraja-valanadu and fixed the payments to be made in cases of tenancy cultivation. Refers to the previous hardships and to the nadu of Kopperunjingadeva.

(South Indian Inscriptions 12 (No. 536 of 1921)

இவ்வாறு “கிராம சபையிலிருந்து சித்திரமேழி பெரியநாடு” எனும் வளர்ச்சி பெற்ற வேளாளர் அமைப்பு தோன்றுவதற்கு முன்பாக கிபி. 1010 -ல் மகாபலிபுரத்தில் 'பேரிளமையார்' என்னும் ஒரு குழுவினர், வணிக நகரத்தாருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதை இரண்டு கல்வெட்டுகள் உறுதி செய்கிறது. (SII IV No.40 & 41). 

எ. சுப்பராயலு அவர்கள் “இப்பேரிளமையார்” என்பார் வேளாண் பெருமக்களே என்பதைத் திருக்கடவூர்க் கல்வெட்டுகளைக் கொண்டு விளக்குவார் (Y Subbarayalu, Political Geography of the Chola Country, pp. 45-46. Dept. of Archaeology, Chennai, 1973)

ஸ்ரீராஜராஜதேவரின் ஆட்சிக் காலத்தில் மன்னார்குடி ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த ஐந்து பேரிளமை நாட்டார் அமைப்பில் பெரும் நிலவுடைமையாளர்களாக இல்லாத உழுகுடி வெள்ளாளர்கள் மட்டுமே இருந்து செயல்பட்டனர் என்பதைக் அங்கு இருக்கும் கைலாசநாதர் கோயிலில் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 

கல்வெட்டு வாசகம்:

1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு (யா)ண்டு இருபத்திரண்டாவதின் எ[தி]ராமா(ண்)டு மினனாயற்று அபரபக்ஷத்து) . யெ. ......... வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிட்டத்து நாள் சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் ஸ்ரீராஜாயி. 

2 ராஜராஜ சதுர்வேதிமங்கலத்து உடையார் ராஜாயிராஜிஸ்வர முடையார் கொயிலில் இருந்(து) (இன்னாட்டுப் பாம்பு)ணிக்கூற்ற(த்து) அகரம் திருஞானச(ம்பத்த) …… மங்கலத்து ஸபையாரும் மஹாஸ

3.பையாரும் ஜயங்கொண்ட சொழப் பெரிளமைநாட்டும் இராஜாயிராஜப் பெரிளமைநாட்டும் நாலாயிரப் பெரிளமைநாட்டும், ஆளப்பிறந்தான் பெரிளமைநாட்டும் கங்கைகொண்ட சொழப் பெரிளமைநாட்டவ(ர்)ரொ

4.டும் கூட இருந்து ………. பண்ணினபடி சென்னிர்வெட்டி செய்யும் மிடத்து ஆளாகச்செய்யம் திருமுகத்தெவை செய்யு(ம்)மிடத்து காவெரி ஆற்றங்கரைகரைக்குக் குடிப்பற்றான நிலத்தால் கொல்லறை செய்யக்கடவர்களா

5.கவு(ம்) நிக்கி வரும் திருமுகத்தெவைக்கு ஆளா(ய்) வந்தது ஊணொபா[தி] செய்யகடவர்களாகவும் பெருங்குடிகள் பெரால் கடமைக்கு வெள்ளாழ(ரை)ச் சிறை பிடித்தல் இவர்கள் அகங்களில் ஒடுக்குதல் செய்யக்கடவதல்லாதா 

6.கவுவம் பரம்பில் நெல்லுங் காசும் வெள்ளா(ளர்) பக்கல் நியெரக (மெ)ழுதி கொள்ளக்கடவதல்லாதாகவும் சிறுமுறி காசு இடக்கடவார(ல்)லவாகவும் ஸபாவிநியோகம் வரிக்கொள்(ளு)(ம்) மிடத்து மடக்கு ஒரு மாவுக்கு சார் நாற்ப(து)ம் பசானம் எண்(ப)பதும் வரிக்கொண்டு இறுக்கக்கடவொமாகவு - 
7.ம் கூட விநியொகத்துக்கு உலகுடைய பெருமாள் வரஸா (த)(ம்)ஞ்செய்தருளி நினைப்பிட்டபடி இறுக்கக்கடவொமாகவும் இதுக்(கு) மெல்ப்பட செலவழிய வெண்டித்துண்(டாகி)ல் மஹாஸபாநியொகம் எழுதி நிலம் , - ப்படியும் குறைவற எழுத்திடுவித்துக் கொண்டு செலவழிப்ப 

8.தாகவும் முதலிகள் பக்கலப்புக்கு (பிராமணர்) ஆதல் வெள்ளாழர் ஆதல்(க்) கணக்கர் ஆதல் ஊற்க்கெ(டு) நாட்டுகெடு பொற்கெடு (சொ)ந்னார் உண்டாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரொ(கி)களுமாய் இவர்கள(பட்)ட தெண்டம் படக்கடவ (கடவ)ர்க(ளா)கவும் இப்படி ஸம்மதிக் – 

9.து மஹாஸபா… பண்ணி (உ)டையார் ஸ்ரீகையி(லா)ஸமுடையார்ரான இராஜாயிராஜீஸ்வரமுடையார் கொயிலிலும் வண்டுவராவதி மன்னனார் கொயிலிலும் கல்வெட்ட சொ(ந்)னொம் இப்படி பெருங்கு(றி)ப்பெருமக்கள் திருவிள்ளமாக இது எழுதிகெந் இவ்வூர் 

10. ஊர்க்கணக்கு செகலுடை(யான் தந்)மபிரியந் எழுத்து) கணக்கு கிழையிலுடையான் எழுத்து உ
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 48 மற்றும் A.R.No. 96 of 1897).

ஸ்ரீராஜராஜதேவரின் ஆட்சிக் காலத்தில் மேலே குறிப்பிட்ட அதே ஆலயத்தில் தென் மேற்க்கு சுவரில் உள்ள மற்றொரு கல்வெட்டு சதுர்வேதி மங்கலத்தில் இருந்த பேரிளமை நாட்டார் அமைப்பில் குடும்பு பார்ப்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலிக்கு குடும்பு காசு என்றும், பிடாகைகளுக்கு பிராமணர் குடும்பு பார்க்க அனுமதியில்லை என்றும், ஒவ்வொரு வருடமும் குடும்பு மாரிட வேண்டும் என்றும் கூறுகிறது. மேலும் குடும்பு பார்த்தவர்களை வெள்ளாள அரையர் என்றும் கூறுகிறது. 

கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x

1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜதெவர்க்கு யாண்டு இருபத்து இரண்டாவதி . . . . . . . . . ன(நாயற்று) . . . . . த்து நவமியும் திங்கள்க்கிழமையும் பெற்ற பூராடத்து (நாள்) சுத்தவல்லிவளநாட்டுத் தனியூ(ர்) ஸ்ரீராஜாயிராஜச்சதுவெதி மங்கலத்து உடையார் ஸ்ரீ கையிலாஸமுடையாரான் ராஜாயிராஜீஸ்வரமுடையார் கொயிலி(ல்)லெ ஸபையாரும் மஹாஸபையா

2.ரும் ஜயங்கொண்டசொழப்பெரிளமைநாட்டும் இராஜாயிராஜப் பெரி)ள(மை) நாட்டும் நாலாயிரப்பெரிளமைநாட்டும் ஆளப்பிறந்தான் (பெரிளமை) நாட்டும் கங்கைகொண்டசொழப் பெரிளமைநாட்டும் நாட்டவரொடும் கூட இருந்து ……….. பண்ணி(ன)படி நம்மூர் பாப் .. . . (லு மிராசு(மாகப்) பலரும் கைவந்தபடி தண்டிக்கொள்கையாலெ எங்களுக்குத் தரிப்பது தியரவெ வெள்(ளாமை) செய்து குடியிருக்கப்போ

3.குதில்லையென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்ப(டி)யாகையால் ஊர் தரி(ப்)பறு[தி] உண்டா . . . . . . . யாலும் நம்முர் இந்நா(ள்) முதல் வரஸாதஞ் செய்தருளின தி(ருமு)கப்படி தெவைசெய்யுமடத்துக் காவெரிக்கரையில் நம்மூர் கொலறை செ… ல் ஒபாதிக்குக்குடிப்பற்றான நிலத்துக்கு வெ . . . . . கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தெவை . .. . . . (ஆ)ளும் பண்ட மு(ம்) 
4.ஊணொபாதி படவும் சென்னிர் வெட்டி செய்யுமடத்து ஆளாக(ச்) செய்யவும் இரா(ச)ராச)புரத்துக்கு காசு (பண்டார) முள்ளிட்(ட) ........ செய்யும் . . . . க்கு மாத்தால் ஓராளாக வந்த ஆள் பொகவும் இதுக்கு மெற்படப் பொகாதொழியவும் இராசராச புரத்து (க்)கு . . . வறுப்பு எடுக்க . . . . . . வெண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிக்கொள்ளா தொழியவும் மக்கடசெவகப்பெற்றுக்கு

5.ப் பரப்பு ஒரு மாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்(டு சி)றுமுறி யெடுத்துத் தெவை செய்விக்கவும் சிறுமுறி காசென் . . யவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திருநானெழுந்தருளுமடத்துப் பரப்பிலெ மாத்தால் ஒரு காசும் (நாழி) அரிசியு(ம்) தண்டிக்கடவரா(யச)மெ குடுக்கவும் எழுந்தருளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவரா …… னனார் திருநாள் எழுந்தருளுமடத்து மாத்தால் ஒரு 

6.காசும் நாழி அரிசியும் தண்டிக்கடவ ரா(ய)சமெ குடுக்கவும் எழுந்தருளுவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் (பு)ணையுண்டார்க்குப் படையிலார் .த காசு (கொள்)ளுமடத்து உலகுடைய பெருமாள் வரஸாபஞ் செய்தருளி இட்டருளின நினைப்பின்ப(டி)யெ குடுக்கவும் ஊரில் வினியோகம் என்று பரப்பில் காசும் நெல்லும் நியொகம் எழுதி வரிக்கொண்டு . . . . ாதொழியவும் வரிக்கற்றை (இ)டுமடத்து அம்ப 

7.லம் மெயவெண்டுங் கற்றைவரிக்கொண்டு இடவும் வகைப்பெறு (த)ண்ட நாயகப்பெறென்றும் புரவரிமுதல கைக்கணக்கர்முதல் . ண்டாளர்முதல் கண்காணிக் கணக்கர்முதலுக்கென்றும படையிலார்க் கென்றும் கட்டளை ….. குடும்பக் காசும் நெல்லும் வரிக்கொண்டு தண்டுக்குடா(தொழிய)வும் ஆண்டுதோறும் குடு.. இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பொ

8.ருந்தினாரை இடவும் பிடாகைகளுக்கு பிராமணர் குடும்பு செய்தல் குடிமை (அ)னுஸரித்தல் செய்யாதொழியவும் (ஊ)ரில மடக்கு . . வினியோ(கம்) வரிக்கொண்டு செலவழியுமடத்து (ப)தினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு (முப்பது) காசும் பசானத்துக்கு மடக்கு ஒரு மா . . . . ஐம்பதாக வந்த காசும் பரப்பில் . . . .. . . ண , களும் 

9.கூட வினியொகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு மூன்றாகத் தண்டிவரும் காசும் பரப்பில் தவிர்ந்து மடக்கிலெ ஒரு மாவுக்கு முப்பதாக வந்த காசு ௰ ஆக . , . ஒருபது காசு ம. க்கிலெ கொள்ளவும் இதில் பதினாலாவது க . . . . . பெற்று வந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவும் கடவதாகவும் பிரா . .. பெர்க்கடமை கட்டி வெள்ளாழர் அகங்களில்ப்புக்கு ஒடுக்காதொழியவும் பிராம்(ண) ... 
கலநாட்டில் வெள்ளாழரையர் . . பிடாகைகளுக்கு குடும்-

10.பும் புரவுஞ் செய்தாரையாதல் ஊர் கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும் முதலிகளுக்கு கொளசசொன்னார் உண்டாகில் கிராமத்துரொகிகளும் நாட்டுத்துரொகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ்சுடடிச் செலவாய் வெண்டுவதுண்(ட்)டாகில் ஸபாநியொகம் எழுதி . . . . . . . . , . . . . . . கூட்டங் . . . . . . . . ளைக்கூட்டம் என்று செய்யக்கடவதல்லாததாகவும் இப்படி … பண்ணி 

11.னமையில் இப்படி பெசி உடையார் ஸ்ரீகயி(லாஸமுடை)யார் கொ(யி)லிலும் வண்டுவராபதி மன்னனார் .ெ . . ' . . ம் கல்வெட்டின . . . . தாக நாங்கூர் நாலாயிரவ)ன்) எழுத்து .. . யொ(க)ப்படியும் ஸபையார் எழுத்து இட்ட நியொகப்படியும் இவ்விரண்டு கொயிலிலும் கல்லில் வெட்டிக் குடுத்தொம் இப்படி . . . . . . . . . . . டாகில் கிராமத்துரோகிகளும் நா. . . . . . . . வர்களாகச்சொன்னோ(ம்) இப்படி செய்க பணியால் ஊர்க்கண.

12.க்கு கெற்குப்பை உடையான் தன்மப்பிரியனும் கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செ(ல்கலு)டையாந் கருணாகரப்பிரியனும் உத்த மப்பிரியனும் கமுகங்குடையா(ன்) திருவரங்கப்பிரியனும் மஹாஜனப்பிரியனும் இறையாங்குடையா(ன்) . . . ப்பிரியனும் - (சி) கானமுடையான் அழகிய மணவாளப்பிரி 


(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 50 மற்றும் ARE. 98 / 1897)

மேலே குறிப்பிட்ட அதே ஆலயத்தின் வடமேற்க்கு மற்றும் தென்சுவரில் உள்ள ஸ்ரீராஜராஜதேவரின் அதே ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேலே கூறிய அதே செய்தியை வழியுறுத்துகிறது.

கல்வெட்டு வாசகம்:

1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் (ஸ்ரீ)ராஜாராஜதெவர் (க்கு யாண்டு) இருபத்திரண்(டா)வதின் எதிராமாண்டு மின(ந்)நாயற்று அபரபக்ஷத்து நவமியும் திங்கள் - கிழமையும் பெற்ற பூராடத்து நாள் (சுத்த) வல்லிவளநாட்டுத் தனியூர் ஸ்ரீராஜாயிராஜச் சதுர்வெதிமங்கவத்து உடையார் [ஸ்ரீ கயிலாஸமு. 
2.டையாரான ராஜாயிரா(ஜி)ஸ்வரமுடையார் கொயிலிலெ ஸ்பையாரும் மஹாஸபை(யா)ரும் ஜயங்கொண்ட சொழப் பெரிளமைநாட்டும் ராஜாயிராஜப்பெரிளமை நாட்டும் நாலாயிரப் பெரிளமைநாட்டும் ஆளப்பிறந்தான் பெரிளமைநாட்டும் கங்கைகொண்டசொழப் பெரிளமைநாட்டும் 

3.நாட்டவரொடும் கூட இருந்து ….. பண்ணின படி நம்மூர் பரப்பிலெ காசும் நெல்லும் ஆகப் பலவகை வந்தபடி தண்டிக்கொன்கையாலெ எங்களுக்குக் தரிப்பறுதியாலெ வெள்ளாழ்மை (செய்)து குடி இருக்கப் பொகு தில்லை யென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்படியாகையால் ஊர்

4.தரிப்பறுதி உண்டாயிருக்கையாலும் நம்மூர் (இ)ந்நாள் முதல் …… (ஞ்செ)ய்தருளின திருமுகப்படி தெவை (செய்யுமி)டத்துக் காவெரிக்கரையில் நம்மூர்க் கொலறை செய்யுமடத்து நிலஒபாதிக்குக் குடிப்பற்றான நிலத்துக்கு வெள்ளாழர் கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தெவையாய் வரும் ஆளும் 

5.பண்டமும் ஊணொபாதி படவும சென்னீர் வெட்டி செய்யுமடத்து அளக்கச் செய்யவும் இரா(ஜ)ரா(ஜ)புரத்துக்கு காசு பண்டார முள்ளிட்ட நெட்டாள் செய்யுமடத்து ஆட்டைக்குமாததால் ஒரு ஆளாக வந்த ஆள் பொகவும் இதுக்கு மெற்படப் பொகாதொழியவும் இரா(ஜ)ரா(ஜ)புரத்து குறைவறுப்பு எடு – 

6.க்குமடத்து எடுக்கவெண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்கு . … த கூலியென்று கூட்டிக்கொள்ளாதொழியவும் மக்கட்செவகப்பெற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தெவை செய்விக்கவும் சிறு. 

7.முறிக்கா சென்றிடாதொழியவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திருவிழா எழுந்தருளுமிடத்து பரப்பிலெ மாத்தால் (ஒரு) காசும் நாழி அரிசியு(ம்) தண்டிக் கடவார்வசமெ குடுக்கவும் எழுந்தளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவராபதிமன்னனார் திரு (விழா எ)ழுந்தருளுமிட. 

8.த்து மாத்தால் ஒருகாசும் நாழி அரிசியும் தண்டிக் கடவார்வசமெ குடுக்கவும் எ(ழுந்தரு)ளிவித்து திருவிளக்குப் பிடி(க்)கவும (பி)ணை உண்டார்க்குப் படையிலார் பெற்றுக் காசு கொள்ளுமிடத்து உலகுடையபெருமாள் (பிர)ஸாதஞ்செய்தருளி இட்டருளின நினைப்பின்படியெ குடுக்கவும் ஊரில் விநி

9.யொகமென்று பரப்பில் காசும் நெல்லும் வரக்கொண்டு, நியொகம் எழிதித் தண்டாதொழியவும் வரிக்கற்றை இடுமிடத்து அம்பலம் மெய்வெண்டும் கற்றை வரிக்கொண்டு இடவும் வகைப்பெறு தண்டநாயகப்பெறென்றும் புரவரிமுதல் கை(க்) கணக்கு முதல் தண்டாளர் முதல் கண்காணிக்க

10.ணக்கர் முதலு(க்கெ)ன்றும் படையிலார்க்கென்றும் கட்டளைகளில் குடும்பு(க்) காசும் நெல்லும் வ(ரி)க்கொண்டு தண்டிக் சூ(டா)தொழியவும் ஆண்டு (தொ)றும் குடும்பு மாறி இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும் (பி)டாகைகளுக்கு பிராமணர்க் குடும்பு செய்தல் குடி(கிழ்) அனுஸரி

11.த்தல் செய்யாதொழியவும் ஊரில் மடக்குமாவில் மஹாவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமிடத்து பதிநாலாவது கார்வரையும் வரிக் . . . . . . . . தபடியெகாருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பது காசும் (பசா)னத்துக்கு மடக்கு ஒரு மாவுக்கு ஐம்பதாக வந்த காசு(ம்) பரப்பில் முன்பி – 

12 லாண்டுகளும் கூட வினியொகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு முன்றாகத் தண்டிவருங் காசும பரப்பில் தவிர்த்து மடக்கிலெ மடக்கு ஒருமாவுக்கு முப். . . . . . . நூற்று ஒருபது காசு மடக்கிலெ கொள்ளவும் இதில் பதினாலாவது கார்வரையும் பெற்றுவந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவு

13.ம் கடவதாகவும் பிராமணர் பெரக்கடமைசுட்டி வெள்ளாழர் அகங்களில்ப் புக்கு ஒடுக்காதொழியவு(ம்) பிராமணரையாதல் நாட்டில் வெள்ளாழரையா. . . . . . . . . . . குடும்பும் புரவும் செய்தாரையாதல் ஊர்க்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும் முதலிகளுக்கு கொள்ளச் சொன்னார்

14.உண்டாகில் கிராமத்துரொகிகளும் நாட்டுத்துரொகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ் சுட்(டி)ச் செலவழியவெண்டுவதுண்டாகில் மஹாநியொகம் எழுதி . . . . . . (கொ)ண்டு செலவழியவும் நாலாங்கட்டளை ஐஞ்சாங்கட்டளை ஆறாங்கட்டளையால் வந்த மடக்கு ஊரிலெ கூட்டங்களிலெ 

15.செரவும் பிறித்து கட்டளைக் கூட்டம் என்று செய்யக்கடவதல்லாததாகவும் இப்படி …….. பண்ணினமையில் இப்படி பெசி உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் கொயிலிலும் வண்டுவராபதி ம(ந்)ந்னார் கொயிலிலும் கல்லு வெட்டிக் குடுப்பதாக நாங்கள் நாலாயிரவரும் எழுத்திட்ட 

16. மஹா நியொகப்படியும் ஸபையார் எழுத்திட்ட நியொகப்படியும் இவ . . . . . 

17.[ட்]டிக் குடுத்தொம் இப்படிமை அழிய எங்களில் செய்தாருண்டாகில் கிராமத் . . 

18.டது படக்கடவர்களாச் சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்கணக்கு நெ(ற்). . . . . . . . . 

19. கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செகலுடையாந் கருணாகரப்பிரியனு ... 

20.வரங்கப்பிரியனும் மஹாஜனப்பிரியனும் துறைமுகங்குடையான் பிரமப்பிரியனு ச 
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 58 மற்றும் ARE. 104 / 1897)
--------------------------------------------------------------------------
நாம் மேலே பார்த்த மூன்று கல்வெட்டுகளிலிருந்து கீழ்காணும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது தெரிகிறது.

1.சதுர்வேதி மங்கலத்தில் இருந்த மஹாசபையை நிர்வகித்தவர்கள் பேரிளமை நாட்டார் என்ற உழுகுடி வெள்ளாளர்கள்

2.சதுர்வேதி மங்கலத்தில் இருந்த பிடாகைகளுக்கு பிராமணர் குடும்பு பார்க்க அனுமதியில்லை 

3. பேரிளமை நாட்டார் என்ற வெள்ளாழ அரையர் குடும்பும் புரமும் பார்த்தனர்

3. குடும்பு பார்ப்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலிக்கு குடும்பு காசு என்று பெயர்

4.ஒவ்வொரு வருடமும் குடும்பு மாரிட வேண்டும் 
என்று குறிப்பிடுகிறது.

மேலும் கிராம மற்றும் நாட்டார் சபையில் குடும்பு (வாரியம்) தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு குடும்பு கூலி அல்லது குடும்பு காசு என்று அழைக்கப்பட்டதை திருவாரூர் மாவட்டம் பெரிய கொத்தூரில் உள்ள மூன்றாம் இராஜராஜன் காலத்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.ஊரங்குடி சனங்களும் இன்னும் சிலரும் ஊரை விட்டுப் போய் (புறம் சாய்ந்து) மாற்றார் பக்கம் சாய்ந்து விட்டனர். ஆகையால், தாங்கள் போன காரணத்தைச் சொல்லிக் கொண்டு மீண்டும் வரக்கூடாது. அவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த குடும்புக்காசு வசூலிக்கப்படக்கூடாது என்றும் சேர்வையாளரைக் காணுகின்ற போது வசூலை வாங்கிக்கொள் என்று அவர்கள் கூறக் கூடாது என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும் குற்றம் செய்தவர்களிடம் தண்டம் பெறுகின்றபோது வெள்ளாளரிடம் தண்டப்பணமாகிய அசலை கொடுக்கக் கூடாதென்று சபையாரும் உடையாரும்(?) பிள்ளைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவ்விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு சபையார்க்கும் உடையார்க்கும் வெள்ளாளர்க்கும் பிடிபாடு ஓலை வந்துவிட்ட காரணத்தினால் இந்த ஓலை பத்து குடும்பர்களுக்கும் ஊரவர்க்கும் வாசித்துக் காட்டப்பட்டது.
கல்வெட்டுச் செய்தி:

“………………………………………
13. ஊரங்குடி சனங்களும் ஊரைவிட்டுப் 
14. புறம் சாய்ந்து இருக்கையாலே (போ 
15. தளை போந) காரணம் சொல்ல வரக் (கூடா), 
16. தென்று உடையார் தீட்டும் எங்களின் (நியோ) 
17. கமும் போக(ப்)பட்ட இடத்து குடு ... 
18. காத்தைக்கில் தரிப்பி … என்றும்
19. குடும்புக்கூலி கொண்டும் (இ)க்குடும்பு ஓ
20. ன்றுக்கு இருபது மாவிலும் தேவை 
21. பைறு . வும் குடும்புக் காசென்று (கொ)
22. ள்ளா தொழியவும் சேர்வை (ய)
23. ளாரை காணத் தண்டி . ..
24. என்று கொள்ளாதொழிய
25. வும் குற்றஞ் செய்தாரைத் தண்டம் 
26. கொள்ளுமிடத்து வெள்ளாழன் 
27. கை அசலிடாதொழியவும் பெற 
28. வேணுமென்றும் சொல்லலிர கே 
29. ட்டு கையிலே இப்படியை உடை 
30. யாரும் னாங்களும் பிள்ளைக்கு விண்ண 
31. ப்பஞ் செய்து போக விட்ட இடத்து 
32 குடும்பு காசு தவின்தபடிக்கு உடையா! 
33. ர் (க்)கும் எங்களுக்கும் வெள்ளாளர் தங்களு 
34. க்கும் பிடிபாடு ஓலை வன்தமையில் இவ்ஓலை 
35. களை கொண்டு பேர்ய குடும்பர்க்கும் ஊரவர்(க்) 
36. கும் வாசித்து காட்டி குடுப்பதாக தவிர்ந்த 
37. ...... கொ(ள்)ளென்று சொன்னமைக் 
38. கு இப்ப(டி) காசு தவிந்த படிக்கும் சேர்வை 
39. யான் வரக்கானா தண்ட 
40. ம் என்று கொள்ள(க்) கடவதல்
41. லாததாகவும் குற்றம் செய்தா 
42. ரை தண்டம் கொள்ளு மிடத் 
43. து வெள்ளாழ்[ரை] அசலிடா
-------------------
68. ... இப் 
69, படியே நியோகமெழுதி குடும் 
70. புக்கு பதக்கு நெல் கொண்டு முழுத 
71. குடும்புக்கு இருபதுமாவாக இந்த ம 
72. டக்கிலே தேவை செய்யக் கடவதா 
73. கவும் குடும்பு எ.. கொள்ளக் கட 
74. வ தல்லாததாகவும் 
(தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் – 2005; த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 187 / 1986)

-------
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பழைய சீவரம் ஊரில் உள்ள பெருமாள் கோயில் மேற்கு முப்பட்டைக் குமுதத்தில் பரகேசரி (முதற்பராந்தகன்) 15 [922] ஆம் ஆண்டு கல்வெட்டு விண்ணபுரத்து பெருங்குறி ஸபையில் வாரியங்களுக்கு குடும்பில் ஒருவரும் ஸபையில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஆண்டு இறுதியில் ஸபையில் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு கணக்கு காட்ட தவறியவர்கள் இரண்டு ஆண்டு வாரியஞ் செய்யத் தகுதியில்லை என்பதை தெரிவிக்கிறது. 

கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x
1.ஸ்வஸ்தி த ஸ்ரீ கொப்பர கெஸரி பர்ம்மக்கு யாண்டு 15 ஆவது நாள் 12 ஊற்றுக் காட்டுக் கொட்டத்து விண்ணபுரத்து பெருங்குறிஸ்ஸபையோம் இந்நாளால் சீர்க்குட்டி அம்பலத்திலெ கூட்டக் குறைவறக் 

2.கூடி இருந்து இப் பதினைந்தாவது முதல் வாரியஞ் செய்யும் வ்யவஸ்தையாவது ஆவ்வவ் குடும்பிற் கொத்தாரும் ஸபைக் கொத்ததாரும் வாரியஞ் செவாராகவும் வாரியம் புகும்பொது ஸத்யஞ் செய்து வார்பலம். 

3.இரு கழஞ்சு பொன் அன்றி மற்று எப்பேர்ப்பட்டிதும் ஏரி ஆயமும் சோறுமாட்டும் முதலாக மற்றும் ஆஜ்ஞா ப்ரஹ்மஸ்வம் எப்பேர்பட்டிதும் கொள்ளோமென்று ஆண்டறுதி செய்து ஸபை, 

4.க்கு ஒக்க கணக்கு காட்டி விடுநாளும் ஸத்யஞ் செய்வாராகவும் புகும்போதும் ஸத்யஞ் செது புகுவாராகவும் இவ்வாரியம் வார்பலங் குடுத்துப் போக்கு காட்டப் பெறாதாராகவும் வாரியம் புக்காரல்லாதார். 

5.வஸ்ஸாந் தொறும் வார்பலங் கொள்வதாகவும் இதன் மேல் வார்பல (மெ)ன்று கொள்ளப் பெறாதாராகவும் வாரியம் இரண்டாண்டடுத்து வாரியஞ் செய்யப் பெறாதாராகவுங் குடும்பழிக்கப் பெறாதாராகவும். 

6. (குறை) அவ்வவ் குடும்புக்கு ஒத்தாரேய் வாரியஞ் செய்வா(ரே) ... (வார்) பல மட்டி செய்து இசைய குடும்பு மட்டி ஒக்க அடைத்துக் கொள்வதாகவும் மன்றாட ஊர் நின்றும் புறப்பட்ட நாள் முதல் ஊர் சோறு. 

7.உண்பதாகவும் ஊர்த் ரவ்யங் கொள்வொமாக (எப்பே)ர்ப்பட்ட ந்யாந்யா வ்யவஸ்தைப் ஸஹவாஸஞ் செய்யப் பெறாதோம் ஆகவும் இவ்வ் யவஸ்தைய் அன்றென்றாரை ஸபையிலும் வ்யவஸ்தய் குடுப்பாராக
8.வும் ஸத்யஞ் செய்யாதார் வாரியஞ் ... ஸத்யஞ் செய்தோம் பெருங்குறி ஸ்பை யோம்.

(ஆவணம்-21, பக்கம்.27 - 28, தமிழகத் தொல்லியல் கழகம் தஞ்சாவூர்)

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தான முடையார் கோயில் கருவறை மேற்கு குமுதத்தில் உள்ள கி.பி.11 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு இக்கோயிலில் உவச்சன் கூத்தாடி ஆன முன்னூற்றுவர்க்கு நிவந்தமாக நிலம் அளித்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது. அக் கல்வெட்டு குடும்பு செய்தவர்களுக்கு வெள்ளாளர், உடையார் போன்ற பட்டங்கள் இருந்துள்ளதை தெளிவாக குறிப்பிடுகிறது.
கல்வெட்டு செய்தி:
x-------x--------x-------x
1.க்கும் நெல்லுக்குமாக ஸ்ரீகோயிலில் உவச்சன் முன்னூற்றுவன் , , , உவச்சன்

2.உவச்சன் கிழணரி கூத்தாடி ஆன முந்நூற்றுவர்க்கு நிவெந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளான் நாநூற்றுவர்க்கு குடும்பில்

3,மூவெலியும் வெள்ளான் எயினத்தம்பாடி உடையான் குடும்பில் ஆறுமாவும் …………

(தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி -5, த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 128/2013)

அதேபோல் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தானத்தில் உள்ள இரண்டாம் ஆதித்ய சோழன் (கி.பி.964) காலத்திய கல்வெட்டில் “வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும்” நிலக் கொடை அளித்ததை தெரிவிக்கிறது. இக்கல்வெட்டில் “வெள்ளாளன் குடும்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது அக்காலத்தில் குடும்பு பார்த்தவர்களுக்கு (குடும்பர்களுக்கு) வெள்ளாளன் என்ற சிறப்பு பெயர் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x
1.ஸ்வஸ்தி ஸ்ரீ கோ பரகேசரி பந்மற்க்கு யாண்டு 8 ஆவது வடகரை ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ மூலஸ்தானத்து பரமஸ்வாமிக்கு திருவாராதனைக்கும் நெல்லுக்குமாக இக்கோயிலில் உகச்சன் முன்னூற்றுவன் ஆன தனி ஆள் இரண்டு உகச்சன் கயிலாயன் தனியாள் மூன்று 

2.கூத்த பெருமாளுக்கு உச்சம் போது இரு நாழி திருவமிதுக்கு அன்னபலி ... யுரி சூ நாடுரிக்கு ஆதித்தவர்க்குமாக குடுத்த நிலமாவது 

3.தேவதானம் ... முகைக்குடி ஸ்ரீ மூலஸ்தான நல்லூரில் நிவந்ததுக்கும் 

4.லில் வெதரன் மனை வெள்ளாள னானதுதம்பாடி உடையான் குடும்பில் எழுமாவரை யாழ ஸ்ரீகோயிலில் சிவப்ராஹ்மணர்க்கு நிபந்தமாக குடுத்த நிலம் ஒன்றேய் எழுமாவரையும் சந்த ராதித்யவற் இ ஸ்ரீ கோயிலில் ஸ்ரீபலி நிச்சல்படி எட்டடிக் கொண்டு கொட்டுவதற்க்கு பொன்

5.க்கும் நெல்லுக்குமாக இ ஸ்ரீ கோயிலில் உகச்சன் முன்னூற்றுவன் ஆன தன் ஆள் இரண்டு உகச்சன் கயிலாய உகச்சன் கீழனரிகத்துடி ஆள் மூன்றுக்கு நிபந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும் ஸ்ரீகோயில்
(ஆவணம்-21, பக்கம்-15, தமிழகத் தொல்லியல் கழகம் தஞ்சாவூர்)

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரசாமி கோயில் கருவறையின் தெற்குச் சுவரில் உள்ள முதற் பராந்தக சோழனின் 40 - ஆம் ஆட்சியாண்டைச் (கி.பி.947) சேர்ந்த கல்வெட்டு குடும்பு காட்டுக்காற்க் குடும்பி என்று குறிப்பிடுகிறது. 

கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x
1.ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொ
2.ண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்
3.டு 40 நாற்பதாவது இ… வடகரைப் பா
4.ம்பூர் நாட்டுத் தேவதானந் திருக்குடமூக்கில் 
5.திருக்கீழ் கோட்டத்துப் பெருமானடிகளு
6.க்கு வெள்ளி மக…. 
7.திருநொந்த விளக்கு
8.ம் சூர்யதேவர்க்கு ..... 
9.மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன்
10.னேந் வைத்தபடி…...
11. நின்ற குடும்பு காட்டுக்காற்க் குடும்பி …. காட்டு
12.க்காற்தலை நெற்றிக் காலும் கண்ணிவிளாகத்து இ
13.ருமாவும் ஆக நிலம் பெதினொரு மாவும் இந்
14.நிலத்துக்கு. மூலபரடைப் பெருமக்களுக்கு நான் 
15.இறைகாவல் குடுத்துடைய பொன்னில் இந்நி
16.லத்தாலுடைய ஒபாதியும் நான் தலைக்கல
17.த்தாலுடைய பொன்னில் நிலவோபாதியால் 
18.வந்த பொன்னும் ஆக பொன் 30 மஞ்சாடி பொ
19.ன்னாலு வந்த நிலம் பதினொருமாவும் கொண்
20.டு சந்திராதித்தவல் சிதாரிக்கும் கற்பூர விளக்கு
21.க்கும் ஆக கடுத்தேன் மாடிலன்பட்ட மகாதே
22.வ னாராயணனேன்.

(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை தொடர் எண் 35 / 1979 (குடந்தைக் கல்வெட்டுக்கள் முதற் தொகுதி)

நாம் மேலே பார்த்த பல கல்வெட்டுகளிலிருந்து கிராம மற்றும் நாட்டார் சபையில் குடும்பு பார்த்தவர்களுக்கு உடையார், வெள்ளாழ அரையர் என்ற சிறப்பு பெயர் இருந்துள்ளது தெரிகிறது. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு குடும்பு கூலி அல்லது குடும்பு காசு என்றும் கூறுகிறது. அதே வேளையில் குடும்பர்கள் தவிர மற்றவர்கள் குடும்பு பார்க்க அனுமதியில்லை என்பதை கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி பிற்கால இலக்கியமான முக்கூடற்பள்ளுவிலும் காணமுடிகிறது. 

பிற்கால இலக்கியமான முக்கூடற்பள்ளு, அதன் கதாநாயகன் வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊருக்கு உழைத்தான் எனக் கூறுகிறது. 

……….ஆருக்கும் பணியான் 
...........................
குடும்பு செய்து ஊராருக்கு உழைப்பான்” 
(முக்கூடற்பள்ளு.பா.88)

மேலும் சென்னை மாகாண மற்றும் சார் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் நவம்பர் 1851 என்ற நூலில் எண் 2 / 1851 எண்ணாக்க கொடுக்கப்பட்டுள்ள வழக்கு 

விவரம் :
அசல் வழக்கு 27 / 1850 கதிர் அமீன் கோர்ட்டு ( நீதிபதி மகமது தாஜுதின் ஹுசைன்கான் ) தேதி. 25.9.1850, திருநெல்வேலி, அப்பீல் எண் 1 / 1851 மாவட்ட சிவில் நீதிபதி, திருநெல்வேலி. குடும்பர்களுக்கிடையே குடும்பு காணியாட்சி உரிமை பற்றிய வழக்கு பற்றி விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.

நாம் இதுவரை பார்த்த கல்வெட்டு மற்றும் இலக்கிய சான்றுகளிலிருந்து சங்க காலம் முதல் கி.பி. 1850 வரையிலும் கிராம சபையின் குடும்பு முறை குடும்பர்களிடையே இருந்துள்ளது தெரிகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் கல்வெட்டுகளை கீழே காண்போம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள பெரும் பாறையில் கி.பி. 3 – 5 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்துக்கு குழலூர்த்துஞ்சிய உடையாரால் வேள்கூரில் பெறப்பட்ட குடும்பியர் பரம்பரையல்லாது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும் என அரசு ஆணையிடப்பட்டுள்ள வாசகங்கள் பொறிக்கப்பட்டள்ளன.
கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x
"........................
8. …………………. பச்செறிச்சில் மலைமேற் செஇவித்த் தேவகுலத்துக்குக் குடும்பியராவாரு குழ

9.லூருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பியர் வழியல்லது வேறொரு குடும்பாடப் பெறாமையும் 

10.மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய…களுடஞ் செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு 

11.கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானேஇ னங்குமானும் முலவியப் பெருந்திணை ப... ஆறு கிழான் கீரங்காரி

12.யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின னோலை எழுதுவான் றமன்காரி 

13.கண்ணன் இது கடைப்பி ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் நரி நாரியங்காரி
..........................."
(ஆவணம் இதழ் -1 / அக்டோபர் 1991 பக்.68 - 69, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் - தமிழகத் தொல்லியல் கழகம் தஞ்சாவூர்)

மேலே கொடுத்துள்ள கல்வெட்டு (தேவகுலத்துக்குக்) கோவில் நிற்வாகம் உட்பட நாட்டார் சபையின் அனைத்து காரியங்களையும் குடும்பியர் பரம்பரையல்லாது வேற்றார் குடும்பாடக் கூடாது என தெளிவாக குறிப்பிடுகிறது.

மூன்றாம் குலோத்துங்க சோழன். (பொ. ஆ. 1178-1218) காலத்தில் வளநாட்டில் உள்ள வேளாநாட்டில் அமைந்துள்ள பிரம்மதேயம் ஸ்ரீ இராசேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபையார்களும், பட்டர்களும், மகாஜனங்களும் உலக முழுதுடையச் சதுர்வேதி மங்கலத்தில் நகரீஸ்வர முடையார் திருக்கோயிலின் திருமண்டபத்தில் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதன்படி கூரை கட்டணங்கள், நிலையாள் முதலியவை முன்னர் நடைமுறையில் உள்ளபடியே செய்யவும் நெல், மஞ்சள், காசு முதலியவை தவிர்த்தும், வெள்ளாளர், தச்சர், கொல்லர் அரிப்பேறு மாற்று கொல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றுடன் குடும்பர்களுக்கு பரிசட்டம் இட்டு காரியத்திற்கு கடவ வேண்டும் என்றும் குடும்பர்கள் இல்லாமல் மற்றொருத்தருக்கும் பரிசட்டம் சூடக்கடவ வேண்டாம் என்றும் குடும்பர்களின் சபையில் ஒரு வருடம் குடும்பு செய்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானித்துள்ளனர். 
கல்வெட்டுச் செய்தி:
x-------x--------x-------x
1.திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டு வீரா அபிஷேகமும் விசையா அபிஷேகமும் பண்ணி ... திரையோ தெசியும் செவ்வாக் கிழமையும் பெற்ற

2.புணர்பூசத்து நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு வெளாநாட்டு ப்ரஹம்தேயம் ஸ்ரீராஜெந்தர சொழச்சதுர்வேதி மங்களத்து ஸபையாரும் பட்டர்களும் மஹாஜனங்களும் இந்தை நாளால் இந்நாட்டு உலகமுழுதுடைச் சதுர்வெ 

3.தி மங்கலத்து உடையார் நகரீஸ்வரமுடையார் கோயில் திருமண்டபத்திலே சபையாரும் பட்டர்களும் மஹாஜனமும் நடந்திருந்து க்ரம்.... மாயிருப்பு...பயங்கரன் தோப்பு பண்டாடு பழநடை செய்து வரும்

4.கூரைகட்டணங்கள் முன்பிலாண்டுகள் செய்துவரும்படியே செய்யக்கடவர்களாகவும் நிலையாளும் முன்பிலாண்டுகள் செய்து வரும் படியே செய்யக் கடவர்கள்...ற வறுப்புக்கு ஒக்கும் அரிசியும் பயறும் பண்டாடு... ப... 

5.ழநடை தாங்களெ எடுக்கக்கடவர்களாகவும் அரிசிக்கு முன்பு எழுதின நியோகப்படியெ... வின்மெல்பட்ட அரிசிக்கு இரட்டி நெல்லுக் கைக்கொண்டு... கொள்ளக் கடவதல்லாதுதாகவும் மஞ்சணைக்கு

6.சில தேவர்களுக்கு ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி ஒடுக்கக் கடவ காசு நீக்கி ஆயமென்று வெள்ளாளரை தண்ட கடவதல்லாதுதாகவும் தேவர்கன்மிகள் தேவைக்கு... படிக்கொள்ளக் கடவதன்று என்று பிள்ளை- 

7.ஒலை வருகையால் மாவிஞ்சு காசும் நெல்லும் தண்டக்கடவ தல்லாது தாகவும் தைச்சர் கொல்லர் அறிபெரும் கொள்ளக் கடவதல்லதுதாகவும் நிச்சயித்து எழுதின நியோகப்படி ஆளி இடக்கடவதாகவும் 

8.குடும்பற்குப் பரிசட்டம் இட்டுதாகில் காரியத்துக்கு கடவ குடும்பர் ஒழிய மற்றொருத்தரும் பரிசட்டம் சூடக்கடவதல்லாது தாகவும் குடும்பர் ஸ்பையில் ..... ஒராண்டு குடும்பு செய்யக் கடவர்களாகவும் குடும்பரும், ... ,
(முற்றுப் பெறவில்லை )
(அய்யம்பேட்டை குடும்பர்சபைக் கல்வெட்டு - ஆவணம் இதழ் 27 / 2016, தமிழகத் தொல்லியல் துறை - தஞ்சாவூர்).

சோழர் ஆட்சிக் காலத்தில் குடும்பர்கள் எனும் நாட்டார்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த குடும்பர் சபை கல்வெட்டு உலகிற்க்கு பறை சாட்டுகிறது. இதன் மூலம் சதுர்வேதி மங்கலத்தில் இருந்த மஹாசபையின் நிர்வாகிகளான குடும்பர்களுக்கு பேரிளமை நாட்டார், வெள்ளாழ அரையர் போன்ற சிறப்பு பெயர்கள் இருந்துள்ளது தெளிவாகிறது. இவ்வாறு சிறப்பாக செயல்பட்ட பேரிளமையார் என்னும் அமைப்பின் பரிமாற்ற வளர்ச்சியே சித்திரமேழி பெரியநாட்டார் சபையாகும். இக்கருத்தையே தொல்லியல் துறை வல்லுநர்களும் வழியுறுத்துகின்றனர். 

குடும்பர் சபை ----> பேரிளமை நாட்டார் சபை ---> சித்திரமேழி பெரியநாட்டார் சபை

Post a Comment

Previous Post Next Post