ஆயுத பூசை கொண்டாடிய மள்ளர்கள் :
சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது.
"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப''
- (பதிற்றுப் பத்து, பாட்டு-66)
மள்ளர்கள் கேடயத்தையும் பூ மாலைபோல் பல வாள்களைக் கட்டி தொங்க விட்டும், அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டும் வணங்கினர் என்ற செய்தியை இந்த பாடல் தெரிவிக்கிறது.
இந்தக் குறிப்பின்படி, இந்த விழவு மழைக்காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக்காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plants, Vol 1 By William Roxburgh, Nathaniel Wallich குறிப்பிடுகிறது.
வாகை மலருக்கு வட மொழியில் "சீர்ஷா' என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும் செந்தாமரையைக் கைகளிலும் "சீர்ஷா” என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் "மேகதூதம்' குறிப்பிடுகிறது.(Floriculture in India By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay, p.607).