களப்பாளன் ஆமூர் முதலியார்:
அச்சுதகளப்பாளன் என்ற களப்பிர மன்னன், மூவேந்தர்களையும் போரில் வென்று ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதுடன் மூவரையும் சிறைபிடித்துக் கொண்டுபோய், ஆமூர் சிறைக் கோட்டத்தில் அடைத்து வைத்திருந்தான் என்பது யாவரும் அரிந்த செய்தி. இந்தக் களப்பிரர் மரபில் உதித்து பிற்காலத்தில் தொண்டை மண்டலத்து ஆமூரை ஆண்ட களப்பாளனை, காளமேகப் புலவர்
“உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்றவொருகோடி
வெள்ளங் காலந்திரிந்துவிட்டோமே- தெள்ளுதமி
ழாமூர் முதலியரசர் பிர தானிஇருக்கப்
போமூரறியாமற்போய்”
“ஆமூரின் முதலியாகிய அமரர்கோமான் போன்றவன் இங்கே இருக்கவும், போவதற்குரிய ஊர் இதுவென முதலிலேயே அறியாதபடி பல ஊர்கட்கும் நடந்துபோய், உள்ளங்காலிலே வெள்ளெலும்பு தோன்றும்படியாக, ஒரு கோடி வெள்ளங்காலம் வீணாகப் பலவூரும் சுற்றி அலைந்து விட்டோமே!”என்று பாடியுள்ளார்.
செங்கல்பட்டு- குமிழி- படுவூர் பகுதியான ஆமூர் கோட்டத்தை அச்சுத களப்பான மரபினர் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் ஆவர். இவனை தொண்டை மண்டல சதகம் களப்பாளன் என்றே குறிப்பிடுகிறது.
“மோதிச்சிவந்த கவி காளமேக மொழிந்த வெண்பாப்
பாதிக்கு முந்திப் பரிசளித்தோன் களப்பாளனென்று
ஆதிக்கம் பெற்றணுமூர் முதலிய ரஇருப்ப
மாதிக்கெலாம் புகழ்கின்ற தொல்சீர் தொண்டை மண்டலமே”
(தொண்டை மண்டல சதகம்)
(இதன் பொழிப்பு)
“புலவோர்களைத் தருக்கவாதத்தால் தாக்கி வென்று செம்மைபெற்ற கவிவல்லோனாகிய காளமேகப்புலவன் வெண்பா பாட, பாதி வெண்பாப் பாடுதற்கு முன்னேயே பரிசளித்தவன் களப்பாளன் என்றுலகத்தார் புகழ ராஜீகம் பெற்ற ஆமுர்முதலி யரசிருக்குந் தானமென்று, நாற்றிசையினுமுள்ளோர் வியந்து சொல்லும்படி பழமையாகிய சிறப்புடைய தித்தொண்டை மண்டலம்.” என்று தொண்டை மண்டல சதகம் தம் முன்னோர் பெருமையை குறிப்பிடுகிறது.
சோழநாட்டு ஆமூரில் 15 ஆம் நூற்றாண்டில் ஆமூர் முதலி' என்னும் களப்பாளன் இருந்ததைக் கவி காளமேகம் பாட்டால் அறிகிறோம். இது களப்பிரர்கள் சோழநாட்டில் 15 ஆம் நூற்றாண்டிலும் வலிமையுடன் இருந்துள்ளதற்க்கு ஒர் அடையாளமாகும்.
களப்பிரர் இனத்தைச் சேர்ந்த அச்சுத களப்பாளன் மூவேந்தரைச் சிறைபிடித்து ஆமூர் கோட்டத்தில் அடைத்தான். களப்பிரர் படையெடுப்பினுல் நாட்டையிழந்த தொண்டைமான் தென்கரை நாட்டுக் களத்தூரைச் சேர்ந்த பூசகுல நல்லவன் என்பவன் உதவியை நாடினான். பூசன் குலத்தினர் படைதிரட்டி தொண்டை மண்டலத்து ஆமூரை தாக்கி, சிறையை உடைத்து மூவேந்தரை விடுவித்தனர். அச்சுத களப்பாளனை வென்று, தொண்டை மண்டலத்தை தொண்டைமான் வசம் ஒப்படைத்தனர். அச்சுத களப்பாளனை வெள்ள துணைநின்றதிற்கு அடையாளமாக பூசன் குலத்தினர்க்கு "அச்சுத தொண்டைமான்" என்ற பட்டத்தையும், கொங்குநாட்டில் 24 நாடுகளையும் ஆதொண்டை நாட்டில் 24 கோட்டங்களையும் பரிசாக அளித்துப் பட்டங்கள் பல வழங்கியுள்ளான். (இணைப்பு 5, 6)
இச்செய்தி கி. பி. 18-ஆம் நூற்ருண்டின் இறுதியில் எழுதப்பட்ட ஒருஒலைச் சுவடியில் உள்ளதாக ஈரோடு புலவர் திரு. செ. இராசு குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தை ஏற்று திரு. நடன காசிநாதன் அவர்களும் களப்பிரர் என்ற நூலில் வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய வெள்ளாளர்கள் தான் களப்பிரர்கள் என்பதை இராகவா அய்யங்கார் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார். சிறையை உடைத்து மூவேந்தரை விடுவித்ததை கொங்குமண்டல சதகமும் உறுதிப்படுத்துகிறது.
"கரையது மேல்கரை நாற்பத்தொன்னுரயிரம் கொண்ட கொங்கில்
சிறையது வாங்கிய தொண்டைமான் வந்து மூவர்சபை
திறையது வாங்கிய பூசணன் தொண்டைமான் செம்மலென
மரபது காத்து நிலை கொள்ளுவோன் கொங்கு மண்டலமே."
(கொங்குமண்டல சதகம்)
என்று குறித்துள்ளது.
நாம் கவணிக்க வேண்டியது என்னவென்றால் களப்பிரர் இனத்தைச் சேர்ந்த அச்சுத களப்பாளன் மூவேந்தரைச் சிறைபிடித்து ஆமூர் கோட்டத்தில் அடைத்தான். இவர்களின் பிற்க்கால சந்ததிகள் களப்பாளன் ஆமூர் முதலியார் என்றும் பிள்ளைமார் என்றும் கூறிக்கொள்கின்றனர். இதை தொண்டைமண்டல சதம் உறுதிசெய்கிறது. மேலும் இன்றைய வெள்ளாளர் சமூத்தைச் சேர்ந்த பல படைத்தலைவர்கள் தங்களை களப்பாளன் என்றே பெருமையாக கூறிக்கொண்டதை கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன. அரித்துவாரமங்கலம் வெள்ளார் செப்பேடு சேர சோழ பாண்டிய மூவரையும் சிறை செய்தவர் இன்றைய வெள்ளாளர்கள் என தங்கள் முன்னோர் பெருமையை கூறுகிறது..
இந்த களப்பிர வெள்ளாளர்கள் வென்ற சேர, சோழ, பண்டியர்கள் வீர மல்லர் குலத்தைச் சேர்ந்தவன் என்று யாப்பருங்கல விருத்தி கூறுகிறது.
"முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைப்பனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த - மறமல்லர்
அடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்துநின் புகழாமோ?"
(யாப்பருங்கல விருத்தி யுரை)
என்று குறிப்பிடுகிறது.
இந்த களப்பிர வெள்ளாளர்களை (சூத்திர வெள்ளாளர்) எதிர்த்த மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களுக்கு (க்ஷத்திரிய வெள்ளாளர்) துணை நின்றவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் என மேற்க்கண்ட சான்றுகள் உறுதி கூறுகிறது.
இந்த வரலாற்று உண்மையை தெரிந்து கொள்ளாமல் இன்று கொங்கு வெள்ளாளர்களில் ஒரு சிலர் களப்பிர வெள்ளாளர்(பிள்ளைமார்) சமூகத்திற்க்கு துணை செல்வது வரலாற்றில் மறக்கமுடியாத பிழையாக அமையும். இதை அவர்களின் முன்னோர்கள் கண்டிப்பாக மன்னிக்கமாட்டார்கள்.
(தொடரும்).