தாராபுரம் கரையூர் குடும்பர்கள் குல தெய்வமாக வழிபடும் பள்ளிப் படை கோவில்.
தாராபுரம் வட்டம் – கொளத்துப் பாளையம் பேரூராட்சி – கரையுர் குடும்பர்கள் குல தெய்வமாக வழிபாடு நடத்தும் லிங்க வழிபாடு.
கரையுர் நாடு – குடும்பர்கள் வழிபடும் குல தெய்வமான வேம்படி கருப்பணசாமி.
இதன் பங்காளிகள் வேம்படி கருப்பணசாமியை வழிபடுவதற்கு முன்பு நல்லதங்காள் ஓடை கரையில் வீற்றீருக்கும் ஏணி பரமனை (லிங்கம்) வழிபாடு செய்த பின் குல தெய்வ வழிபாட்டை ஆரம்பிப்பார்கள்.குல தெய்வ வழிபாட்டின் ஓர் அங்கமாக லிங்க வழிபாடு இருந்து வருகிறது.
பிரமாண்டமாக இருக்கும் இந்த லிங்கத்தையும் கல்வெட்டையும் (27.06.2015) ல் ஆய்வு செய்த திருமதி.மூர்த்தீஸ்வரி - துணைக் கண்காணிப்பாளர் – தொல்லியல் துறை – இந்திய அரசு.- சென்னை அவர்கள் இது பள்ளி படை கோயிலாக இருக்கக் கூடும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தவர் மட்டும் குல தெய்வ வழிபாட்டுடன் இந்த பள்ளி படை கோயிலை வழிபடுவதால் இந்த லிங்கம் இருந்த கோயில் அவர்களின் முன்னோராக இருக்க வேண்டும்.என கூறினார்.
அரசர்கள் புதைக்க பட்ட இடமே பள்ளிப் படை கோயிலாகும்.என்றும் இந்த லிங்கம் இருந்த கோவில் குடும்பர்களின் முன்னோர் வழிபாட்டின் ஓர் அங்கம் என்றார்.