தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 1
தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குடும்பர் எனும் தேவேந்திர குல மள்ளர் சமூகத்தில் நடந்த ஒரு திருமண விழா பற்றிய சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்புடன் வாழ்ந்த வேந்தர் மரபினரை இன்று சிலர் தலித் என்றும் தாழ்த்தப்பட்டவர் என்றும் கூறியும், எழுதியும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இச் சான்றுகளை பார்த்த பின்பாவது தங்களுடை நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக தேவேந்திர குல மள்ளர் சமூகத்தவர்கள் தன் முன்னோர்கள் இந்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வேந்தர் மரபினர் என்பதை மணதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் பிழைப்புக்காக மள்ளர் சமூகத்தவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், தலித் என்றும் யார் கூறினாலும் நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். நம் சமூக அடையாளங்களை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்க்கு தடையான சொற்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், குலத்தொழில், உணவு பலக்கவழக்கங்கள் போன்றவற்றில் நம் சமூகத்துடன் முற்றிலும் வேறுபட்ட சமூகங்களை நம் சமூகத்துடன் இனைத்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒதுக்கிவைப்போம் என ஆங்கில வறுட புத்தாண்டு தின தீர்மாணமாக வேந்தர் மரபினரான தேவேந்திர குல மள்ளர் சமூகத்தவர்கள் சூழுரைப்போம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 1
மணமகன் கோதமங்கலத்து அரசக்குடும்பன் மகன் சின்னபாப்பான் குடும்பன்
பனை ஓலையில் எழுதப்பட்டுள்ள இந்த தேவேந்திர வம்சத்தார் மங்கல திருமண வாழ்த்து 300 – 350 ஆண்டுகளுக்கு முன் கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புணர்பூச நட்சத்திரத்தில் கோதமங்கலத்தில் இருக்கும் அரச குடும்பன் மகன் சின்னப்பாப்பான் கல்யாண வாழ்த்தில் பாடப்பட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாங்கக் குறிப்பை வைத்துக் கொண்டு இதன் சரியான ஆங்கில ஆண்டைக் கண்டுபிடிக்க முடியும் (கி.பி. 20.1.1650)
இந்த ஓலைச் சுவடி மூல ஓலைச்சுவடியிலிருந்து பழனியைச் சேர்ந்த கருப்பண சாம்பான் மகன் தவசிமுத்து வாத்தியாரால் படி எடுக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்தைப் பாடியது தாராபுரம் தாலுகா பொன்னிவாடியில் இருக்கும் சின்ன வீரக்குடும்பன் மகன் உடச்சிக் குடும்பன் என்றும் இந்த ஏடு அவருக்குச் சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஓலைச்சுவடியைப் பெற்று பெயர்த்து எழுதி அனுப்பியவர் தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் ஆகும்.
தேவேந்திரக் குடும்பனார்கள் திருமண விழாவில் பாடப்படும் இப்பாடல் அவர்களின் சிறப்புகளையும் விருதுகளையும் கொடிகளையும் கூறுகிறது.
பதினெட்டாயுதம் தரித்தல், பதினாறு மேளங்களை முழங்குதல், யானை மற்றும் குதிரைமேல் மண ஊர்வலம் வருதல் முதலியனவும், விருந்துக்கு பயன்படுத்தப்படும் நெல்லு வகைகளும் கூறப்பட்டுள்ளன.
பழனிச் செப்புப்பட்டையம், காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம், சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு, நல்லூர்ச் செப்புப்பட்டயம் ஆகிய செப்புப்பட்டயங்களும், சங்கர நயினார் கோயில் கல்வெட்டுகள் இந்த சிறப்புகளையும் விருதுகளையும் தேவேந்திரக் குடும்பர்களுக்கு உரியதாகக் கூறுகிறது.
இந்த ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணச் சடங்குகள் வருமாறு:
1. கடவுள் வாழ்த்து
2. திருமண வீட்டாரை வாழ்த்துதல்
3. வேதியர் பல சோதிட நூல்களையும் படித்து முகூர்த்தம் பார்த்தல்,
4. திருமண பொருத்தம் பார்த்தல்
5. திருமணவிருந்துக்கு நெல்வகைகளைக் கூறி அத்தனை அரிசையும் கொண்டு வருதல்
6. பால், தயிர்,காய்கறி,பழம்,சர்க்கரை முதலியன கொண்டு வருதல்
7. மந்திரி பிரதானிகள் திருமண நிகழ்வுகளை பார்வையிடுதல்
8. பந்தல்கால்களுக்கு மரம் கொண்டு வருதல்
9. பந்தல்கால்களுக்கு பட்டுச் சுற்றுதல்
10. தட்டானிடம் நகை செய்யப் பொன் கொடுத்தல்
11. நகை வகைகள்
12. கைக்கோளனிடம் கூரைச்சேலை மற்றும் இதர சேலைகள் கொண்டு வரப் பணித்தல்,
13. சேலை வகைகள்
14. தாய்மாமன் மணமகனுக்குப் பட்டுக் கொடுத்தல்
15. மணமகன் அலங்காரம், மாலைகள், மணமகள் அலங்காரம்,
16. குடைகள், டால்கள், குதிரை அணி, கொம்பு மேளங்கள் முழங்க மணமகன் மணமகள் இல்லத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்
17. மணம்கன் வரவேற்பு
18. மலர்தூவி ஆலாத்தி எடுத்தல்,
19. திருமணம், மஞ்சல் நீராடுதல்
20. மணமக்கள் ஊர்வலச் சிறப்பு, சீதனங்கள்
2. திருமண வீட்டாரை வாழ்த்துதல்
3. வேதியர் பல சோதிட நூல்களையும் படித்து முகூர்த்தம் பார்த்தல்,
4. திருமண பொருத்தம் பார்த்தல்
5. திருமணவிருந்துக்கு நெல்வகைகளைக் கூறி அத்தனை அரிசையும் கொண்டு வருதல்
6. பால், தயிர்,காய்கறி,பழம்,சர்க்கரை முதலியன கொண்டு வருதல்
7. மந்திரி பிரதானிகள் திருமண நிகழ்வுகளை பார்வையிடுதல்
8. பந்தல்கால்களுக்கு மரம் கொண்டு வருதல்
9. பந்தல்கால்களுக்கு பட்டுச் சுற்றுதல்
10. தட்டானிடம் நகை செய்யப் பொன் கொடுத்தல்
11. நகை வகைகள்
12. கைக்கோளனிடம் கூரைச்சேலை மற்றும் இதர சேலைகள் கொண்டு வரப் பணித்தல்,
13. சேலை வகைகள்
14. தாய்மாமன் மணமகனுக்குப் பட்டுக் கொடுத்தல்
15. மணமகன் அலங்காரம், மாலைகள், மணமகள் அலங்காரம்,
16. குடைகள், டால்கள், குதிரை அணி, கொம்பு மேளங்கள் முழங்க மணமகன் மணமகள் இல்லத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்
17. மணம்கன் வரவேற்பு
18. மலர்தூவி ஆலாத்தி எடுத்தல்,
19. திருமணம், மஞ்சல் நீராடுதல்
20. மணமக்கள் ஊர்வலச் சிறப்பு, சீதனங்கள்
முதலியன கூறி இறுதியில் தமிழ் மொழி மற்றும் இந்திரன் முதலிய தெய்வங்களை வாழ்த்தி வாழி கூறப்படுகிறது.
ஒலைச்சுவடி
ஏடு – 1
தேவேந்திர சாதியார் தேவேந்திர குடும்பர்கள்
கல்யாண மங்கல, மங்கள் வாழ்த்து எழுதத்துடங்கியது
பாலதெண்டாயுதபாணி துணை குமரகுருபரன்
முன்னின்று லெட்சிக்கவும்.
கல்யாண மங்கல, மங்கள் வாழ்த்து எழுதத்துடங்கியது
பாலதெண்டாயுதபாணி துணை குமரகுருபரன்
முன்னின்று லெட்சிக்கவும்.
கடவுள் வாழ்த்து
ஹரி ஓம் நன்றாள்க குருவாழ்க குருவேதுணை
ஓம் சமேதரராக எழுந்திருந்து ஓம் நமச்சிவாயவென்று
உன்னை நினைந்திடுவேன், அம்மா உனக்கு மகன்
அய்யாவு னக்கடிமை என் மேல் வினையும் இனிவார்
காலனையும் முன்னோடி வந்து முழுதுமெனைக் காத்தருளாய்
கடலை பாசிப்பயிறு கற்கண்டு எள் பெரியும் விடலை
கரும்பு இளநி வேண்டியது நான் தருவேன்
குடவயிறே இக்கதையை எழுத நின்று காத்தருள்வாய்
கொம்பெரடிந்து பாரதத்தை குடைந்துமீதெழுந்து
கம்பமத கரியே கற்பகமே காத்தருள்வாய்
சம்போ நற்செஞ்சடையன் பெற்ற மதகளிரே
நம்பித் துணையே தனியான கற்பகமே
ஏடு - 2
நம்பித் தொழுதிடுவேன் நாள்தோறும் உன் பாதம்
தும்பிக்கையானே துவனமொன்றும் வாராமல்
மங்கள வாழ்த்து மனை வாழ்த்து வாழ்த்துகிறேன்
சேவகமலைமாது சீர் மாதுந்தான்வழி
அங்கையர்கண் மாது அருள் மாதுந்தான் வாழி
பார் மாது வாழி பன்னுல கோ தான் வழி,
திருமண வீட்டாரை வாழ்த்துதல்
பூ மாதுபோலே, புவிதலிலே வாழ்ந்திருப்பீர்
நான் வாழ்த்தும் நல்வாழ்த்தும் நன்மை பல உண்டாவீர்
செல்வந்தழைத்திடுவீர், சீதேவிநல்கிடுவீர்
நன்மை பவுசு பெற்று நாள்தோறும் உன் பாதம்
அத்தமும் பொன்னும் ஆடைகளுமுண்டாவீர்.
ஏடு - 3
புத்திராதி பெற்றெடுத்து புண்ணிய முண்டாவீர்
கல்யாணங் கல்யாணம் காரிக்கைக்கு கல்யாணம்
கல்யாணம் செய்கிற மைந்தனையும் பாருமென்றார்
அல்லி யரசியரை அர்ச்சுணர்க்குக் கொள்ளவென்று
மங்கையருக்கு நல்முகூர்த்தம் வந்து காணென்று சொல்லி
வேதியர் முகூர்த்தம் பார்த்தல்
வாசிக்கும் வேதியரை வரவழைக்க வேணுமென்றார்
சொல்லிவிட்ட நாளிகையில் தூதர் போய் வேதியர் முன்
அருளிப்பாடென்று சொல்லி அன்பதுந்தான் கூடி
நல்ல நல்ல மாமறை நூல் நால்மறையோன் எடுத்து
சுகவல திருமறையும் மார்க்கமுள்ள சாஸ்திரமும்
ஏடு -4
சரநூல் மரண கண்டிதப் பாத பஞ்சப்பட்சி
உரைநூல் உரைத்த கதை யோக நூல் தன்னுடனே
ஏடும் எழுத்தாணியுடன் இசைந்த நூல் தன்னுடனே
தேடி எடுத்து தெரிந்து சிவநூலை
ஆதிமறையோர்கள் அருள் சாதகம் புரிய
பூமிமெழுகி புரந்தரர்கள் சூழ்ந்து வர
சரநூல் வேதியர்கள் சாணம் பிடித்து வைத்து
தாளுந்த செஞ்சடையன் தன் மகனை முன் நிறுத்தி
வாளவித்து யாக விநாயகனைத்தான் தொழுது
வள்ளரால் மகளை மகன் முன்னே வைத்தவர்கள்
(வள்ளல் மகன் என்பது தேவேந்திரரைக் குறிக்கும் - பார்க்க பழனிப் பட்டயம் )
ஏடு - 5
எள்ளும் பொரியும் இன்பக் கடலையும்
தெள்ளு தினைமாவும் தேன்பாகுஞ் சர்க்கரையும்
வெற்றிலையும் பாக்கும் மிகவே எடுத்து வைத்து
அப்பம் இளநீர் திராட்சை பலாச்சுலையும்
ஒப்பிரவு செய்து உபசரித்து நினைந்த பின்
அஸ்டாச்சரமுமான முறைமையினால்
விஷ்ணுவைப்போலே விளங்கிடு சாத்திரங்கள்
பேறும் பேறு நான்கும் பெண் பிறந்த மென்நூலும்
வாழும் படியாக வகை வகையாய் தானுரைத்தார்
சுலகு அரைத்தான் அதின் பிர்மம் தானுரைத்தான்
ஏடு 6
திருமணப் பொருத்தம்
சென்று பொருத்தங்கள் லக்கினப் பொருத்தம் கன்னியருக்கு
வாக்குப் பொருத்தம் மனப்பொருத்தம் கன்னியற்கு
குடும்பப் பொருத்தம் குணப்பொருத்தம் கன்னியருக்கு
நாலு பொருத்தம் வேணுமிந்த கன்னியருக்கு
சேலைப் பொருத்தம் மந்திர மிந்தக் கன்னியற்கு
தாலிப் பொருத்தம் தாழைக்குமிந்த கன்னியருக்கு
இந்தப் பொருத்தமெல்லாமே இருக்குமிந்த கன்னியருக்கு
கும்ப முகூர்த்தங்கூடின நாளையிலே
ஏழாங்கிழமையிலே யினிநாங்குத் திங்களிலே
நாளாகுமென்று சொல்லி நான் மறையோன் கூறியதை
ஏடு - 7
திருமண விருந்துக்கு - நெல் வகைகள்
கோடாமலேயுழுது கூறிய மிதைத்தான் - பூ
வாடாமலே விளையு மங்காமலே தாத்தானும்
படசைப் பெருமாளவன். மூங்கிநெல்லரிசி
சம்பாளை செம்பாளை ஆன குலவாளை
செம்பாளை செந்தாளை சிறுவேளை நெல்லுடனே
குங்கும சம்பா குணமாரி தன்னுடனே
மோட்டச்ச குருவை முங்கமுள்ள மட்ட வெள்ளை,
வளந்தரத் தனக்கு மல்லிகைச் சம்பாவுடனே
பாலே விறுத்தந் தனக்கு பாலக் கடுங்காய் நெல்லுடனே
ஏடு - 8
சுகந்தால விதுந்த (9க்கு) சொக்கன சம்பா நெல்லுடனே
மீனவர்களுண்ணும் மிகுந்த தோருச வெள்ளை
ஆதிகுல வாளை ஆனமணவாநி
காடை கழுத்தான் கனத்த மிளகுச் சம்பா
ஒடைதனிலே விளையும் உயர்ந்த குல வாளை
சத்தூலிச் சம்பா கனத்தகுருவைக் கிணையாக
நச்சரத் தூரமான தொருநல நல்ல மனவாகி
உரை நெல்லுச் சம்பா (21த செ) மூக்கனுடன்
வஞ்சமில்லாமல் பிரித்து வாலரிசிக் கிருவியுடன்
(குறிப்பு: 21 த செ. என்பது அடிக்கப்பட்டுள்ளது அது தேவையில்லை )
ஏடு - 9
கல்லுப்பெரு வாரியுடன் சைலச் சிவதாரியுடன்
பேருசொல்லா முண்டான் பெருமூக்கன் நெல்லுடனே
பெரிய நெடுங்காலி பெருவெள்ளை நெல்லுடனே
சூதுமரியாத சுருனைவேறு வெள்ளையுடன்
சாதிக்கருங்காலி சம பண சால் நெல்லரிசி
பேரும் பெருந்தாளை பின்னரில மூக்கனுடன்
சுந்தமலையிலுள்ள ஆன தினையரிசி
வந்தவங்க ளுண்ணும் வரக்கரிசி தன்னுடனே
நெல்லரிசி அத்தனையும் நெருமூச்சிந்த பின்பு
அரிசிப் பொதிகளை வரவர கொடுவார்கள்.
ஏடு - 10
காய் கனிகள்
நல்லாவின் பால் தயிறும் நலமுடனே கொடுவார்
ஒடிமரையும் முழுக் கலையும் புலிவாயும்
வெத்திலை கற்பூரம் விரையக்கொடுவார்
ஆடை கொடுவார் ஆடைசீர் கொடுவர்
சாடுவிர் சுற்றிதாரங்கள் கொண்டு வருவரும்
தேங்காய் விளாங்காய் தேர்ந்ததொரு மாதுளங்காய்
தென்னை கதளிகளும் தேன் கரும்புச் சக்கரையும்
ஆவின் பால் தயிர் நெய் அவதவரே கொண்டு வர
தேசத்துள்ள சிரமடி வந்து தென்று சொல்லி
வாசப் பிரதானியர்களும் மந்திரியார் தான் கூடி
(பகுதி 2 ல். தொடரும்) தகவல் பாண்டியன் மள்ளர்.