திருநெல்வேலி மாவட்டம் கடையம் ஒன்றியம் மந்தியூர் கிராமத்தில், தேவேந்திரகுலவேளாளர்கள் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடுகாட்டில், இறந்தவர்களின் சமாதியின் மேல் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.
53 சிவ மரபின் அடையாளமாய்
தேவேந்திரகுல வேளாளர் வாழ்வியலில் சிவலிங்கம்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சிவ மரபைச் சார்ந்த சைவர்கள்.
இச்சமூகத்தினர் பிறப்பு முதல் இறப்பு வரை சிவ மரபு சார்ந்த சடங்குகளையே பின்பற்றுகின்றனர்.
இடுகாட்டில் சமாதி மேல் மண்டபம் கட்டி அதனுள் சிவலிங்கம் வைப்பது இம்மக்களின் மரபாகக் காணக் கிடைக்கிறது.
இவ்வாறு சிவலிங்கம் வைக்கப்பட்ட சமாதியை தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூர் (செம்போர்) கிராமத்திலும், கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்திலும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்திலும் காணமுடிகிறது.
குறிப்பாக இறுதிச் சடங்கின் போது சொக்கன் சோறு, மோட்சம் சோறு என்று கூறும் வழக்கைக் கொண்டுள்ளனர்.