தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக நடத்திட வேண்டும்
தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் அழகர்சாமி பாண்டியன் கோரிக்கை ..
ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த நமது தாய்த் திருநாட்டை மீட்பதற்காக 1942 ம் ஆண்டில் துவங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும்(INA) இந்திய தேசிய ராணுவத்தின் வீரியமான போராட்டங்களால் தான் நாடு விடுதலை அடைந்தது.
1942 ஆகஸ்ட்ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்திலும் இராமநாதபுரம் பகுதி மக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.குறிப்பாக
இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் விடுதலை போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று பலர் கடும் தண்டனைகளுக்கு உள்ளானார்கள்.
அந்நாளில் பள்ளி மாணவரான ஐயா இமானுவேல் சேகரன் அவர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 18 வயது நிரம்பாத பள்ளி மாணவர் என்பதை அறிந்த ஆங்கிலேய அரசு மூன்று மாத சிறைவாசத்திற்கு பின்பு அவரை விடுதலை செய்தது.
நமது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் கூடத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் புகைப்படங்கள் ஆவணமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதில் விடுதலைப் போராட்ட வீரர் ஐயா திரு. இமானுவேல் சேகரன் உள்ளிட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இணைக்கப்படாமல் விடுபட்டிருப்பது பேரதிர்ச்சியையும் பெரும் வியப்பையும் தருகிறது.உயர்திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தியாகி இமானுவேல் சேகரன் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்களை இணைக்க ஆவன செய்திடவும்,
பேரறிஞர் அண்ணா அவர்களால் "உலகம் போற்றும் மாவீரன்" என்று புகழாரம் சூட்டப்பட்டவரும் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் , மேதகு ஆளுநர்கள், மாண்புமிகு பாரதப்பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி இயக்க தலைவர்கள் போற்றிப்புகழும் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களுடைய தியாகத்தையும் மக்கள் நல பணிகளையும் சிறப்பிக்கும் வகையில் இவ்ஆண்டு 2023அக்டோபர் 9ஆம் தேதி முதல்2024 வரை ஓராண்டுக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும். பரமக்குடியில் பிறந்தநாள் நூற்றாண்டு வளைவு அமைத்திடவும் , முழு உருவ வெண்கல சிலை நிறுவிடவும். ஈகை நாளான செப்டம்பர் 11 அன்று அனைவரும் வந்து செல்ல ஏதுவாக அரசு விடுமுறை நாளாக அறிவித்திடவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சந்திப்பில் தேவேந்திரர் இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் க.ரவி , லாந்தை ஊராட்சி மன்ற தலைவர் சா.ராமகிருஷ்ணன் சமூக செயற்பாட்டாளர்கள் அழகர்சாமி, லாந்தை பிரபு அஜீஸ்பாய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...