கரூர், ஜூன் 13–
கரூர் கலெக்டர் அலு வலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமை யில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
இதில் கரூர் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் மற்றும் -நிர்வாகிகள் கலெக்டரிடம் - அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பிற்கு எதிராகவும் சமூக நீதிக்கு எதிராகவும் எங்கள் தேவவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாழும் குடியிருப்பு தெரு என்றும், எஸ்சி மற்றும் முகவரியின்
பெயர்கள் அரிசனத்தெரு என்றும், ஆதி திராவிடர் காலனி என்றும் உள்ளது. இது எங்களை இழிவு படுத்தும் வகையிலும், அனைத்து சமுதாய மக்களோடு இணக்கமாக வாழ முடியாத சூழ்நிலை யும் உள்ளது. மேலும் சாதி பிரிவினையை ஏற்படுத்த துண்டு கோலாகவும் உள்ளது.
எனவே இந்த பெயர் களை மாற்றிட வேண்டும் என்று மனுவில் தெரி வித்துள்ளனர்.