மள்ளர் பள்ளர் ஒருவரே..

கி.பி.1529 வரை தமிழகத்தையும் இந்தியாவையும் இன்னும் பிற நாடுகளையும் மாறி மாறி ஆட்சிசெய்த ஒப்பற்ற இனம்.  கடல் கடந்து  மலேசியாவை இலங்கையை பர்மாவை சிங்கப்பூரை இன்னும் ஏனைய பல நாடுகளையும் தமது வாளின் வலிமையால் இணையில்லா வீரத்தால் மேன்மையுள்ள இராஜதந்திரத்தால் வென்று ஆட்சி 
புரிந்து எல்லையில்லாப் புகழ் படைத்து சகல

பழம் பெரும் சங்கத்தமிழ் இலக்கியங்களும்போற்றிப்புகழ்பாடும் சேர சோழ பாண்டிய

ரச பரம்பரையினராகிய  மள்ளர் குலத்தவர்களே!  

              மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும். உழவர் என்பதற்கு தொல்காப்பியம் வேளாளர் எனப்பொருள் கூறுகின்றது.பின் நாட்களில் உழவுத்தொழிலில் இறங்கிய சில சாதிப்பிரிவினர்களும் குல உயர்வு கருதி தங்களையும் வேளாளர்களென அழைக்க முற்பட்ட பொழுது அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர் தங்களை மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து தாம் மேல்க்குலத்தவர் எனப்பொருள்படும்படி தம்மைத் தேவேந்திரகுல வேளாளர் என அழைத்தும் ,பிறரால்(தமிழகத்தில்)  அழைக்கப்பட்டும் வருகின்றனர்.

        மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர் ,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக நிகண்டுகள் கூறுகிறது. 

திவாகர நிகண்டு:-

திவாகர நிகண்டு என்ற நூல் கிபி 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது.

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் எனும் பெயர்" - (மள்ளர் இலக்கணம்)

"களமர், தொழுவர், மள்ளர்,கம்பளர், விளைஞர், உழவர், கடைஞர், கிளைஞர் " - (மருத நில மக்கள் பெயர்)

 '"உழத்தியர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர்  - (மருத நில மகளிர்  பெயர்)

வேளாளர்-தொழிற்பெயர்.



பிங்கல நிகண்டு : 9ம் நூற்றாண்டு. 

"செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப"

    - என்று பிங்கல நிகண்டும் 



மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வரி  மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.

—- பெரியபுராணம்திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம்பாடல் 22.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு.

—- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்புபாடல் 25

கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்

—- கம்பராமாயணம்.

வழிபாட்டு ஆவணம் :

சோழ நாட்டு பகுதியை ஆண்ட ஒரு சிறந்த மல்ல அரசனின் பள்ளிப்படை கோவிலே மல்லாண்டார் கோவிலாகும் .திருச்சி,கரூர் ,நாமக்கல் ,சேலம், பெரம்பலூர்  ஆகிய மாவட்டங்களில் வாழும் மள்ளர்களின் முழுமுதல் கடவுள் இந்த மல்லாண்டார் சாமியாகும் . இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது யாதெனில் இந்த மல்லாண்டார் சாமியை இன்றுவரை மள்ளர்கள் மட்டுமே வழிபடுகிறார்கள் . மற்ற சமுதாயத்தினர் யாரும்  மல்லாண்டார் சாமியை  வழிபடுவதில்லை. மேலும் இந்த மல்லாண்டார் கோவில் சோழ நாட்டு பகுதியில் உள்ள ஊர்களில் மூப்பர் (மள்ளர்) தெருக்களில் மட்டுமே இருக்ககூடிய கோவிலாகும்.


செப்பேடு ஆவணம் :
மீனாட்சிபுரம் செப்பேடு 
மள்ளர் குல குடும்பர்
செப்பேடு ஆவணம் :
மானூர் செப்பேடு 
மள்ளர் தேவேந்திர குடும்பர்
மாற்று சமூகத்தினர் கூறிய ஆவணங்கள் :

         தேவேந்திர குல வேளாளர் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் உள்ளனர் என்று  (தமிழர் சரித்திரம்.  திரு.ந.சி.கந்தையா பிள்ளை எழுதிய புத்தகம் )என்ற நூலில் தெளிவாக கூறிப் பிட்டு உள்ளார் 

தகவல்: 
           பஞ்சாபில் உள்ள " மல்டன்" என்னும் இடம் மல்லன்/மள்ளர் (அ) #மள்ளன் என்ற மக்கள் வாழ்ந்த இடமாகும். இந்தியாவில் மேற்கு புறத்தில் வாழும் மள்ளர்கள் முதன்மை சாதிகளாவார்.
தமிழகத்தில் ஒரு பிரிவினர் இவர்கள் " மல்டன், மர்வமல்வ, இராசபுத்திராவின் காணப்படுகின்றன. பள்ளர் என்பது மள்ளர் என்பதன் உச்சரிப்பு வேறுபாடே அதுமட்டுமின்றி செவுரஸ்ராவில் வாழும் சாதியினர் குடியரசு இப்பெயர் உண்டு என்று இப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

பள்ளு இலக்கியம் :
பள்ளர்கள் மள்ளர் என்று கூறுகிறது

ஆவணம்
A Glossary of judicial and revenue terms and of useful words occuring in offical documents of the British India by (Horace Haymen Wilson 
1st january - 1855)

மள்ளர் வேளாண்மை குடியான பள்ளர்
என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளர்வரி - உழவு குடியான பள்ளர்கள் அறுவடை செய்து அவர்களுடைய நெல்
கதிருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வரி கட்டியவர்கள்.
மள்ளர் தான் பள்ளர் என்று  J.H Madura Nelson குறிப்பிடுகிறார்
ஆவணம் :
வள்ளல்களும் வீரர்களும் வாழ்ந்த நாடு - பள்ளர்( மள்ளர் )நாடு
ஆவணம் :
                 மூன்றாம் நூற்றாண்டு பெரும்பாணாற்றுப்படையில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த உழவர் பெருங்குடி மக்களை மள்ளர்/பள்ளர் உழவர் ஒருவரே என்று, மள்ளர் (உழவர்) தெரு ‌ அருகில் தான் அரசு அரண்மனை
இருந்ததாக தமிழ் ஸ்டடீஸ் திரு சீனிவாச ஐயங்கார் அவருடைய
நூலில் குறிப்பிட்டுள்ளார் (1914) பக்கம் 76
மற்றும் கீழ்காணும் புகைப்படங்கள் 
இந்த தகவலுக்கு மேலும் அடிப்படை ஆய்விற்கு வலு சேர்க்கிறது.
ஆவணம் :
          1929 மெட்ராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் - (ராமச்சந்திர தீக்ஷிதர், கிருஷ்ணசுவாமி ஐயங்கார் )
அவர்கள் மள்ளர்களே பள்ளர் மருத நிலத்து மக்கள் என்று குறிப்பிடுகிறார்
ஆவணம் :
"பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளன் பிற்காலத்தில் பள்ளன் என்றும்"

"பள்ளர்களை விவசாயி குடியும் போர்குடி என்று குறிப்பிட்டுள்ளார்"

டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual VOl I 1940)
Page -859
ஆவணம் :
1888 வருஷம் ஒரு பிஎச்டி படிச்சவங்க
டாக்டர். வின்சுலோ 
டாக்டர்.குஸ்தாவ் ஒபரட்
பள்ளர் எப்படி மள்ளர் ஏன்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் . 

THE ORIGINAL INHABITANTS OF BHARATAVARSA OF INDIA BY GUSTAV OPPERT (PhD) - 1888 .
(Physiological remarks - letter M is permuted  labials as P , B , v and vice versa ) 

Dr.Winslow described - PALLAR IS PEASANT  TRIBE HAS CHANGED INTO MALLAR (மள்ளர்)
திருவாங்கூர் சமஸ்தானத்தில் பல்லன் எனும் பாண்டியன் @ நாயகன்!

1.பல்லன் இனக்குழுவினர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தென்பகுதியில் உயரமான மலைப்பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள்.
2.பல்லன் என்பவர்கள்  சங்க இலக்கியத்தில் மள்ளன் என்று அறியப்படுகிறார்கள்.
3.பல்வன் என்பவர்கள் போர்க்குணமிக்கவர்கள்.
4.பல்லன் என்பவர்கள் பாண்டியன் மற்றும் நாயகன் @ நாயக்கன் ஆகிய பட்டங்களுடன் அறியப்பட்டு வருகிறார்கள்.

ஆதாரம்:

1. Census Commissioner of Travancore, Census of India, 1931 Volume XXVIII Travancore Part I Report,.pp 384

ஆவணம் :
Comprehensive Tamil and English dictionary of High and low tamil by Rev.Miron Winslow D.D (America missionary Madras) 1862

(Pallan is peasant tribe dwelling in the south in  supposed to be changed of mallar) 
#பள்ளன் தான் மள்ளர் - திரு வின்சுலோ (விரிவான தமிழ் ஆங்கில அகராதி 1862 )
ஆவணம் :
1857 ஆண்டு TAMIL POETICAL ANTHOLOGY
#மள்ளர் - #பள்ளர்

ஆவணம் :
மள்ளர் - உழவர் -படைவீரர்
ஆவணம் :
நாமதீப நிகண்டு
மள்ளர்-பள்ளர் -களமர் -கம்பளர்-மருத நிலத்தான்நிலத்தான்
ஆவணம்:
ஆசிரிய நிகண்டு
மள்ளர் -பள்ளர் -களமர்-மருதநிலத்தான்
ஆவணம்:
பெருங்கதையில் மள்ளர் மல்லர்

1."உழவ ரொலியுங் களமர் கம்பலும்
வளவய விடையிடைக் களைகளை கடைசியர்"
உழவர் ஒலி, களமர் கம்பல், களைகளையும் கடைசியர் மடைவாய் திருத்தும் மள்ளர் கம்மை, மருதநிலம் வழிச் செல்லும் மல்லலம் பெருவழி, கோட்டையைக் காக்கும் மள்ளர் முதலி யவற்றைக் கூறுகிறார். 
ஆவணம்:

The history of Tamils and Sinhalese of sir Lanka 
என்ற புத்தகத்தில் மருதம்-வளமான பகுதிகளில் வாழும் மக்கள்  கடையர், மள்ளர் , பள்ளர் என்று குறிப்பிட்டுள்ளது 
பக்கம் - 90

ஆவணம் :
  திருத்தலையூர் தலபுராணம் ,முசிறி,திருச்சி மாவட்டத்தில்- தலபுராணத்தில் மூலமும் உரையில் மள்ளர் =பள்ளர்/ உழவர்
ஆவணம் :
போடி நாயக்கனூர் ஜமீன் மற்றும் பேரையூர் ஜமீன்தார்களால் இயற்றப்பட்ட தென்கசைபள்ளு...
இதில் பள்ளர்கள் மள்ளர்கள் என்றும் பள்ளிகள் மள்ளிகள் என்றும் கூறப்படுகின்றனர்...!!!
மள்ளர்கள் எருதுபூட்ட பூசை செய்வதும், அதை குடும்பர்கள் பலர் வீரத்துடன் அடக்குவதும் பாடப்பட்டுள்ளது...!!!
இதில் கதை நாயகனாக வரும் குடும்பன் பெயர் வீர வெள்ளைய குடும்பன்...!!!

Post a Comment

Previous Post Next Post