கிழக்கிந்திய கம்பெனி நடத்திய
"தீ ரேட் முக்கோணவியல் சர்வே ஆப் இந்தியா" 1802
மெட்ராசில் இருந்து ராமேஸ்வரம் நடத்தப்பட்ட அந்த சர்வேயில்
Palla women rice field - #pallathivayal
#பள்ளத்திவயல் என்று ஒரு இடம் குறிக்கப்பட்டிருக்கிறது
மற்றும் பள்ளர்கள் நகரம் உருவாவதற்கு முன்பு காடுகளில் பூர்வீகமாக வாழ்ந்த குடி என்று குறிப்பிட்டிருக்கிறது
பள்ளர் வீட்டுப்பெண்கள் தனித்து அன்றே நிலவுடைமையாளர்கள்ஆக இருந்ததற்கு இது ஒரு சான்று!!!
மள்ளர்/பள்ளர் சமூகம் அளித்த நிலதானம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
பெரும்படைச் சாத்தான் சோழர் காலத்தில் கட்டப்பட்டது
9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டும் உள்ளது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பழமைமிக்க கோவில்.
இந்த கோவிலின் நுழைவாயிலில் கொல்லம் ஆண்டு 1088ம் வருடம் அதாவது கிபி 1913ம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் சுப்ப குடும்பன் மக்கள் இருவர் இக்கோயிலுக்கு 75 குழி நிலம் தானமாக கொடுத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தானம் வழங்கிய குடும்பர்களின் சிற்பங்கள் கோவில் நுழைவாயிலில் கைகள் கூப்பிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளர் சமூகத்தை குடும்பர் என்கிற பெயரில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சமூக நடைமுறையில் பள்ளர் சமூகத்தை குடும்பர் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இக்கல்வெட்டு பள்ளர் சமூகம் நிலதானம் செய்ததற்கு மிகப்பெரிய சான்று.
வடுகர்களால் நிலங்களை இழந்த மள்ளர்கள்
புதிய அரசு வரும்போது பழைய அரசு மரபுகளை சார்ந்தவர்களின் உடமைகளை பிடுங்குவதும், கொடுமைகளுக்கு உள்ளாக்குவதும் சமுதாய வரலாற்றில் நெடுகிலும் நாம் காணக்கூடியதே...!!!
அவ்வகையில் ஏற்கனவே அர்சர்களாக இருந்த மள்ளர் இனம் வேற்று மொழி ஆட்சியாளர்களால் வீழ்த்தபட்டது...!!!
இவ்வகையில் தெலுங்கு நாயக்கர்களால் மள்ளர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு அவர்களும், அவர்களுக்கு துணை நின்ற களப்பிர வேளாளர்களுக்கும், இன்னும் பிற சமூகங்களுக்கும் கொடுக்கப்பட்டு பள்ளேசல்கள் இயற்றி சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளனர்...!!!