அம்மச்சியாபுரம் பாண்டியர்கள்

முற்கால பாண்டியர்கள் தேடி பயணம் 
மூவேந்தர் எழுச்சி என்பதை உணர்த்தும் விதமாக சமீப காலமாக பல வரலாற்று ஆவணங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

சென்ற முறை பாண்டியர்களின் திருச்செந்தூர் முருகன் கோயில் வெண்கொடை குமிழி ஒன்று கண்டுபிடிக்கபட்டது.

பிறகு சோழர்காலத்து நீதி நிலைநாட்டும் முத்திரை பதித்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது.

தற்சமயம்  பாண்டியர்களின் ஓலைச்சுவடி வெளிவந்துள்ளது .
அம்மச்சியாபுரத்தில் பொய்சொல்லா கூட்டத்தின் வேட்டைகருப்பசாமி கோவில் புதுப்பிக்க இன்று கோவில் சுவரை அகற்றும் போது பழமையான பல ஓலைசுவடிகள் கிடைத்துள்ளது...
அதில் பாண்டியர்கள் பற்றியும், குடும்பர்கள் வரலாறு பற்றியும், காலாடி பரம்பரை பற்றியும் நாம் பாண்டியர்களின் வம்சா வழியினர் என்பது பற்றியும், சிவ வழிபாடுகள் கொண்ட பரம்பரை என்பது பற்றியும், மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எப்படி கட்டி வழிபட பட்டது என்பது பற்றியும்,  சிவன் கோவிலுக்கு வழங்கிய நன்கொடை பற்றியும், வேட்டை செய்து குலம் காத்த வரலாறு பற்றியும், தெளிவாக எழுதியுள்ளது...


மேலும் சென்ற ஆண்டு ( 16 அக்டோபர் 2020) அன்று தேனிமாவட்டம் அம்மச்சியாபுரம் ஒரிஸாபாலு அவர்கள் ஆய்வுக்காக எதையோ தேடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தேடி வந்தது இதுவாக இருக்குமோ என்ற வியப்பு ஏற்படுகிறது


Post a Comment

Previous Post Next Post