மள்ளர்/பள்ளர்- தேவேந்திர குல வேளாளர்

அன்பான தமிழ் சமூகங்களுக்கு:
x----------x----------x---------x---------x
இன்று தமிழகத்தில் உள்ள சாதிப் பட்டியலில் கீழ்க்கண்ட பல்வேறு பிரிவுகளில் இருக்க கூடிய மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் ஒரே பண்பாடு உடையவர்கள். உழவை குல தொழிலாக கொண்ட மருதநில மக்கள். இவர்கள் நெல்லின் மக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மருத நிலத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மள்ளர்களின் வழிவந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இக்கருத்தை நடுநிலையான தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழக சாதி பட்டியல்
x------x-------x------x-------x
BC – பிரிவு
-----xx------ 
1. குடும்பி (90), 
2. காலாடி(54), 
3. பணிக்கர்(56), 
4. மூப்பன்(102))

MBC – பிரிவு
-----xx------ 
மன்னாடி(16) 

SC – பிரிவு
-----xx------ 
1. குடும்பன் (35), 
2. பண்ணாடி(54), 
3. காலாடி(28), 
4. பள்ளன் (49), 
5. தேவேந்திர குலத்தான்(17), 
6. கடையன்(26), 
7.வாதிரியார் (72))

DC - பிரிவு
-----xx------ 
(காலாடி(28) 

இவ்வாறு இன்று பல பிரிவுகளில் காணப்படும் இம்மக்கள் சுதந்திரம் அடைவதற்க்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேளாண்குடி சமூகம் என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கி.பி. 1951 - ஆம் ஆண்டு இராமநதபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் வடஆர்க்காடு போன்ற மாவட்டத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் இம்மக்களை இந்திர குல வேளாளர், தேவேந்திர குல வேளாளர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதிப் பட்டியல் பிரித்த பொழுது தேவேந்திர திருக்குலப் பள்ளர் பிற்ப்படுத்தப்பட்ட (BC – பிரிவு) பிரிவு என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  கி.பி. 1924 ஆம் ஆண்டு P.M.Kandaswamy Moopanar is a fit person to be nominated to the Madras Legislative council as a representing the Backward  community of Devendhra Tirukkula pallars என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசு செய்த தவறால் இந்த சமூகத்தின் சில பிரிவுகளை SC என்றும் சில பிரிவுகளை BC – பிரிவு என்றும், சில பிரிவுகளை MBC – பிரிவு என்றும் பிரித்துவிட்டனர். 

அதன் பின்பு அரசியல் கட்சிகள் தனது வஞ்சகத்தை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு SC – பிரிவில் உள்ள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஆதிதிராவிடர், தலித் என்று கூறி இவர்களின் அடையாளத்தை அழிக்க முற்ப்படுகின்றனர். இதன் பொருட்டே எங்கள் பெயரை மீண்டும் தேவேந்திர குல வேளாளர் என பெயர் திருத்தம் செய்து SC – பிரிவு இல்லாத வேறு ஏதாவது ஒரு பிரிவில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உள் ஒதிக்கீடு உடன் பெறுவதே எங்கள் சமூகத்தின் முதன்மை கோரிக்கையாக பல ஆண்டுகளாகப் போராடிவருகிறோம்.

இவற்றைப் புரிந்துகொள்ளாத சில சுயநலவாதிகள் திராவிட, தலித்திய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தூண்டுகோளினால் எங்கள் சமூகத்திற்க்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்க தக்க செயலாகும். உங்களுடைய கோரிக்கை ஞாயமென்றால் நீங்கள் முறையாக நீதிமன்றத்தை நாடலாம் அதை விடுத்து இரு சமூகங்களுக்குகிடையில் சண்டையை மூட்டும் செயலில் ஈடுபடுவது நல்லதல்ல.

இவர்கள் அறியாமையில் செயல்படுவதை சுட்டிக்காட்டி வேளாளர் / வெள்ளாளர் என்பது ஒரு இனத்திற்க்கான பெயர் அல்ல என்பதை விளக்கி சங்க இலக்கியம், நிகண்டு, அகராதி, கல்வெட்டு, செப்பேடு மற்றும் பள்ளு இலக்கியம் துணையுடன் 100 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் படித்து தெரிந்துகொள்ளாமல் மீண்டும் மீண்டும் வேளாளர் நங்கதான் வெள்ளாளர் நாங்க தான் என வெற்றுக் கோசம் போடுகின்றனர், அதன் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் IBC – Tamil க்கு பேட்டி கொடுக்கும் போது சில தவறான செய்திகளை கொடுத்துள்ளார். அவற்றிற்க்கு விளக்கம் கொடுக்க வேண்டியது நம் கடமை என்பதால் இங்கு குறிப்பிடுகிறேன்.

குற்றச்சாற்று – 1
--------xx--------
பாண்டியர் காலத்தில் இவர்கள் புறஞ்சேரிப் பள்ளர் எனக் கூறப்பட்டுள்ளது. பின்பு எவ்வாறு இவர்கள் தங்களைப் பாண்டியர் எனக் கூறுகின்றனர்
இவர் கொடுத்துள்ள கல்வெட்டுச் செய்தியானது

“……..புறஞ்(செரியில்) பள்ளற்க்கும் (பிடா)கைகளி(ல்) 
இருக்கும் பள்ளற்க்கும் நாங்கள்ப் பிரமா…..ண்ணிக்குடுத்த பரிசாவது……..”
(புதுகோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண். 550 )                

நமது பதில்:
--------xx-------
புதுகோட்டை மாவட்டம், திருவிளாங்குடியில் இடிந்துகிடக்கும் சிவன்கோயில் சாரத்தில் உள்ள அந்த கல்வெட்டு மூலத்தில் “புறஞ்” ஏன்றுதான் உள்ளது. அதை படியெடுத்தவர் “புறஞ்(செரியில்)” என்று எழுதியுள்ளர். மேலும் அந்த கல்வெட்டில் வரக்கூடிய செய்தி இழிவான செய்தியும் அல்ல. ஆனால் இன்று இதை சில வக்கரப்புத்தியுள்ளவர்கள் தவறாக பொருள்கொள்கின்றனர். அது அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது என்றே நாம் கருதவேண்டியுள்ளது.

“புறஞ்செரி” மற்றும் “புறஞ்சேரி” என்பது ஒரு ஊரின் பெயர். மேலும் மூவேந்தர் ஆட்சி காலத்தில் சேரி என்ற சொல் இழிவான சொல்லாக கருதப்படவில்லை. இதை தேவநேய பாவாணர் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். இக்கருத்தை பல தொல்லியல் அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் 13 காதைகளைக் கொண்டது. அதில் ஒன்று புறஞ்சேரி இறுத்த காதை ஆகும். 

6 - மதுரைக் காண்டம்:
x--------x--------x---------x
6.1 காடுகாண் காதை
6.2 வேட்டுவ வரி
6.3 புறஞ்சேரி இறுத்த காதை
6.4 ஊர்காண் காதை
6.5 அடைக்கலக் காதை
6.6 கொலைக்களக் காதை
6.7 ஆய்ச்சியர் குரவை
6.8 துன்ப மாலை
6.9 ஊர்சூழ் வரி
6.10 வழக்குரை காதை
6.11 வஞ்சின மாலை
6.12 அழற்படு காதை
6.13 கட்டுரைக் காதை

என்பவை ஆகும். 
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88

இதில் வரும் புறஞ்செரி என்பது ஒரு ஊரை குறிக்கும் சொல்லாகும். அதைவிடுத்து நீங்கள் நிணைப்பதுபோல் ஒதுக்கப்பட்ட மக்கள் வாழும் ஊர் என்பது பொருள் அல்ல. 

அதேபோல் தேவநேய பாவாணர் அவர்களும் கீழ்கண்டவாறு விளக்கம் தந்துள்ளார்.

 தலைநகரும் பிறநகருமான பேரூர்களெல்லாம் பல சேரிகளாகப் பாகுபட்டிருந்தன. ஒவ்வொரு குலத்தாரும் அல்லது வகுப்பாரும் சேர்ந்து வாழும் தெரு அல்லது தெருத்தொகுதி சேரி எனப் பட்டது. 

"ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும்" (983) 

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. 

தெருப்பேச்சைத் தொல் காப்பியர் ‘சேரிமொழி‘ என்பர். உறையூரில் ஏணிச்சேரி என்பது ஒரு பகுதி. சேரிகள் 

1.பார்ப்பனச்சேரி, 
2.கம்மாளச்சேரி, 
3.தளிச்சேரி, 
4.பரத்தையர்சேரி, 
5.பறைச்சேரி 

என அவ்வவ் வகுப்பாற் பெயர் பெற்றிருந்தன. தளிச்சேரி என்பது கோயிற்பணிப் பெண்டுகள் வாழுமிடம். ஒரு நகரின் மூலப் பழைமையான சேரிக்கு அடிச்சேரி என்றும், கோட்டை வாயிலுக்கு எதிராக இருக்கும் சேரிக்குத் தலைவாய்ச்சேரி என்றும் பெயர். பார்ப்பனச்சேரிக்குப் பிற்காலத்தில் அக்கிரகாரம் எனத் தனிப்பெயர் வழங்கிற்று. சேரி, பாடி எனவும் படும். 

     ஒரு பேரூரில் உள்ள சேரிகள், அரச அரசியரின் பெயர்களைச் சிறப்புப் பெயராகப் பெற்றிருப்பது முண்டு. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்களித் திட்டையில், 

1.அருண்மொழித் தேவச்சேரி, 
2.சனநாதச்சேரி, 
3.நித்தவிநோதச்சேரி, 
4.இராசராசச்சேரி, 
5.நிகரிலிச் சோழச்சேரி, 
6.அழகிய சோழச்சேரி, 
7.சிங்களாந்தகச்சேரி, 
8.குந்தவ்வைச் சேரி, 
9.சோழகுலசுந்தரிச் சேரி, 
10.இராசமார்த்தாண்டச் சேரி 
எனச் சேரிகள் இருந்தன. 
(தேவநேய பாவாணர் – பழந்தமிழாட்சி பக். 12)

மேலே குறிப்பிட்டுள்ள பல அரசர்கள், அரசிகள் பெயர்களுடன் “சேரி” என்ற சொல் வருவதால் அவர்களும் சேரி மக்கள் என கூறலாமா? அதேபோல் பார்ப்பனச்சேரி, கம்மாளச்சேரி என்று வருவதால் பார்ப்பனர்களும், கம்மாளர்களும் சேரிகளில் வாழ்ந்தார்கள் எனக் கூறலாமா?. இன்றைய காலத்தில் சேரி என்ற சொல்லுக்கு இருக்கும் மரியாதையை மூவேந்தர் காலத்தில் பொருத்திப்பார்ப்பது தவறான செயல் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆதலால் மூவேந்தர் ஆட்சி காலத்தில் புறஞ்சேரி என்ற ஊரில் பள்ளர் சமூகத்தவர்கள் இருந்ததால் அவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர் என்ற பொருள் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

குற்றச்சாற்று – 2
--------xx--------
கண்டதேவி கல்வெட்டில்  “மற்றும் உள்ள கீழ்ச்சாதிகள்” என பள்ளரை குறிக்கிறது.

நமது பதில்:
--------xx-------
இவர் கூறும் கல்வெட்டுச் செய்தியானது ஹிஜிரா கல்வெட்டு எண் : 771

இவரைப்போல்தான் சில வருடங்களுக்குமுன் ஒரு சில சமூகத்தவர்கள் என்னுடன் நடந்த விவாதத்தில் இச்செய்தியை பதிவு செய்தார். அதற்க்கு அப்பொழுதே பதில் கொடுத்துவிட்டேன். அதற்க்கு அச்சமூகத்தவர்கள் யாறும் இதுவரை மறுப்பு பதில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வெட்டு ஒரு தனிநபர் (ஜமின்தார்) தோட்டத்தில் இருந்ததாக அந்த நூலை எழுதிய ஆய்வாலர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செய்திகளை யார்? வேண்டுமானாலும் எழுதி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த கல்வெட்டுச் செய்தியை எந்த தொல்லியல் துறையும் வெளியிடவில்லை. 

கல்வெட்டுச் செய்தி:
x-------x-------x---------x
100.…………..
எங்கள் உருவத்தைப் பெண்
உருவமாக வகுத்து பி(பா)
பாணர் புலையர் பள்ளர்
பறையர் மற்றும் உள்ள கீழ்

105.சாதிகளும் எங்களுடை
ய இந்த உருவத்தை எழுதி
மற்றும் உள்ள தேசத்தி
லும் இவர்கள் சிறுபசக

110.ள் காலிலே கட்டி இழுக்
துக் கொண்டு திரியக்கட
வர்களெனவும் இப்படிக்
கமைந்து எங்கள் நா
ட்டுக்குத் தாயூரான

115.இதிலே மணத் தோர
ணமுங் கட்டிக் கல்லு
ம் வெட்டி நாட்டினோ
ம் ஆணை நாட்டில்
சாரண வரும் இளாத 

120.சார்களும் இன்னு. 
(Inscription of Hijira 771)

“பி(பா)பாணர் புலையர் பள்ளர்
பறையர் மற்றும் உள்ள கீழ்சாதிகளும்“ 

என்றுதான் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் நினைப்பது போல் பள்ளர்களை கீழ் சாதி என்று கூறவில்லை. அவ்வாறு குறிப்பிட நினைத்திருந்தால் 

“பாணர்,புலையர்,பள்ளர்,பறையன் உள்ளிட்ட கீழ்சாதியினர்” என்று கூறப்பட்டிருக்கும். மேலும் பாணர்(பாண்டிய வேளாளர்) என்பது உங்கள் சமூகத்தின் உட்பிரிவு என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நீங்கள் கூறுவது போல் பொருள் கொண்டால் பாண்டிய வேளாளர் கீழ் சாதியா? அல்லது பாண்டிய வேளாளர் வேறு சாதி என்றால் அவர்கள் யார்? இதற்க்கு பதில் கூறுங்கள்.

கி.பி.1290 – ஆம் ஆண்டில் சுல்தான்கள் மதுரையை தாக்கி பாண்டியர் களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பாண்டிய மன்னர்கள் அப்பகுதியில் ஆட்சி செய்யவில்லை. மேலும் அந்த கல்வெட்டில் Hijira inscriptions 761 & 771 எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது இந்த ஹிஜிரா என்றால் முகமதியர்களின் ஆண்டை குறிக்கும். இதற்கு நேர் எதிர் ஆங்கில ஆண்டு கிபி 1383 மற்றும் கிபி 1393 ஆகும்.

இதன்படி இக்கல்வெட்டு எழுதிய அக்காலத்தில் மூவேந்தர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் அந்த கல்வெட்டில் hijira 761 என்று இல்லை என்றும் அதில் கொல்லம் ஆண்டு கிபி 865 ஆண்டு என உள்ளது என்றும் அதற்கு இணையான ஆங்கில வருடம் கிபி 1586 மற்றும் கிபி 1596 எனவும் இதே புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமார கம்பணன் கி.பி. 1370 - இல் மதுரைமீது படையெடுத்து மதுரை சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தான். குமார கம்பணனின் இந்த வெற்றி குறித்து அவருடைய மனைவி கங்காதேவி ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

இதன் மூலம் இக்கல்வெட்டின் ஆண்டு முன்னுக்குப் பின் முறன்பட்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ள செய்தியும் நம்பகத் தன்மையை இழக்கிறது. செய்தி எதுவானாலும் சரி இது பாண்டியர் கால கல்வெட்டு இல்லை என்பது தெளிவு.

மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் மள்ளர் சமூகத்தவர்கள் யாரும் அடிமையாக இருந்ததாகவோ அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டதாகவோ எந்த சான்றுகளும் இல்லை என்றும் மேலும் அவர்களே மூவேந்தர் மரபினர் என்று     தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன் அவர்கள்  தெரிவித்துள்ளார்  

“மருத நிலத்தைச் சார்ந்த வேளாண் மக்களாகிய உழவர் ஓரளவுக்கு செல்வச் செழிப்பு அடைந்தவுடன், அவர்களின் ஒரு பிரிவினர் போர்ப் பயிற்சிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினர். ஆதலால் வேந்தனுக்குப் போர் மறவர்களாகவும் தொண்டு செய்தனர். அப்பொழுது மள்ளர் என்று அழைக்கப்பட்டனர். பின்னாளில் இவ்வேளாண் மக்களில் சிறு, சிறு குழுக்கள் தோண்றி அதற்குத் தலைவனானவன் மல்லர் என்று கூறப் பெற்றான். ஆதலால் இவர்களது ஆதிக்கத்திலிருந்த பல ஊர்கள் மல்லன் மூதூர் என்று வழங்கப்பெற்றது. சமுதாயத்தில் இவர்கள் மன்னர்களுக்குச் சமமான நிலையிலேயே வைத்து மதிக்கப்பெற்றனர்.

   அதன் காரணமாகத்தான், புறநானூறு சமுதாயத்தின் கடைநிலையிலிருந்த குடிகளான துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற குடிளோடு உழவரையோ, மள்ளரையோ, மல்லரையோ சேர்த்துப் பேசவில்லை.

 சங்ககாலத்தில் உழுதுண்ணும் வேளாண் மக்கள் போற்றிப் பாராட்டப்பட்டுள்ளனர் என்பது அக்கால இலக்கியங்களால் தெரியவருகிறது. வேளாண் தொழில் உழவுதொழில் என்று சுட்டப்படுகிறது. உழவர், உழத்தியர், என்றும் கடையர், கடைசியர் என்றும் அழைக்கப்பெற்றனர். கடைசியர் ஆடிய கூத்து கடையம் என்று வழங்கப்பெற்றது. வாணனுடைய சோவரணன் வடக்கு வாசலில் அயிராணி, உழத்தி வடிவில் ஆடிய ஆட்டம் கடையம் என்று கூறப்படும். பெரும்பாணற்றுப்படை , மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் ஆகிய நூல்களில் மருதநில மக்களின் வாழ்க்கைமுறை விரித்து கூறப்பட்டுள்ளது.

 நாடாளும் வேந்தனின் வெற்றி, மண்ணை உழும் கலப்பையையே சார்ந்திருந்தது என்னும் கருத்தைப் புறநானூற்றின் கீழ்க்காணும் வரிகள் புலப்படுத்துகின்றன. 

   “பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
              ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே”   

 பொய்யாமொழிப் புலவனாகிய திருவள்ளுவரோ உழவுக்கெனத் தனி அதிகாரத்தையொதிக்கிப் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி என்றும், உழுபவன் கைமடங்கினால் உலகம் துறந்து துறவிகாட்டும் அமைதியான வாழ்வு அமையாது என்றும், பலகுடை நீழலும் தம் ஒரு குடைக்கீழ்க் காண்பர் உழுதொழில் புரிவோர் என்றும் இயம்பியுள்ளார்.

 உழுகுடியின் ஒரு சாராரைப் ‘பகை அரசர் மள்ளர்’ என்றும் வம்ப மள்ளர், ‘மள்ளன் கோப்பெரு நற்கிள்ளி’ என்றெல்லாம் புறநானூறு கூறுகிறது. அகநானூறு ‘காட்டுவழிச் செல்லும் மள்ளர், என்றும் தெரிவிக்கிறது. வெம்போர் மள்ளர் என்று பதிற்றுப்பத்து இயம்புகிறது. 

 தகடூர் அதியமான்கள் மள்ளர் வழிவந்தோர் என்று டாக்டர் குருசாமி சித்தர் கூறியுள்ளார். அதாரமாகத் தகடூர் யாத்திரை என்னும் நூலின் வரிகளை மேற்கோள் காட்டுயுள்ளார். ‘தெய்வ மல்லன்’ என்று வருவது தேவேந்திரர்களைக் குறிப்பதாகக் கருதியுள்ளார். அதியனை மழவர் பெருமகன் என்று ஒளவையார் பாடியுள்ளார். 

 மள்ளர் மக்களில் சிலர் சிறந்த புலவர்களாகவும் விளங்கியிருக்கின்றனர் என்பது, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்பவராலும், மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார், கடுவன் இளமள்ளனார் போன்ற புலவர்களின் பெயர்களாலும் தெரியவருகிறது. 

மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருதநில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர் போலும். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் “மல்லன் மூதூர் மகிழ் விழாக காண்போன்” என்றும் மல்லர்களின் பேரூர், மூதூர் போன்றவற்றை இலக்கியங்கள் சுட்டுகின்றன.

சங்க இலக்கியங்கள் காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண்குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது". 

 மல்லர் என்று சொல்லுக்கும் ‘சத்துருமல்லன்’ ‘மாமல்லன்’ என்று பட்டப்பெயர்களைக் கொண்டிருந்த பல்லவ மன்னர்களுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை. அது மட்டுமல்லாமல் பல்லவர்களுக்குக் ‘காடுவெட்டி’ போன்ற பொதுப் பட்டப்பெயர்களும் உண்டு. ஆதலால் உழுதொழில் குடிகளின் தலைவனான மல்லருக்கும், காடுகொன்று நாடாக்கிய பல்லவர்களுக்கும் ஒற்றுமையுண்டு என்று எண்ணத்தோன்றுவதும் இயற்கையே. ஆனால் பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனின் பட்டப் பெயரான ‘மள்ளர் மள்ள’ என்னும் சொல்லைப் பார்க்கும்போது மள்ளர்களின் எதிரி தொண்டைமான் என்பதாக தெரிகிறது. ஆதலால் மருதநில வேந்தர்களோடுதான் மள்ளர்களைத் தொடர்புபடுத்திவிடமுடியும் என்று தோன்றுகிறது. ஆகவேதான் கோப்பெருநற்கிள்ளியின் படையில் இருந்தாரைப் புலவர் மள்ளர் என்று அழைக்கிறார். கோப்பெருநற்கிள்ளி சோழ மன்னன். மருதநிலப் பகுதிக்குத் தலைவன். ஆதலால் பண்டைய சோழ வேந்தர்களுக்கும் மள்ளர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புண்டு. எங்கெங்கு மள்ளர் போர் மறவர்களாகவோ அல்லது வேளாண் தொழில் புரிபவர்களாகவோ விளங்கினார்களோ அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்கள், மள்ளர்களின் தலைவன் என்றும், மள்ளர்களின் மன்னன் என்றும் கூறிக் கொண்டார்கள். ஆதலால்தான் சேர மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் புலவர் ‘மள்ளர் ஏறு’ என்று பாடியுள்ளார். “    

 
                (தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.- வரலாற்றில் தேவேந்திரர்கள்)

இதுபோல் தொல்லியல் மற்றும் வரலாற்று துறை அறிஞர்களின் கருத்துக்களை கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வரலாற்றில் மள்ளர் - பகுதி 1 (முனைவர் இரா.ப.கருணானந்தன்  - கல்வெட்டாய்வாளர் - தொல்லியல் துறை – உதகை)
http://aringarparvai.blogspot.com/2018/06/1.html

WHO ARE THE SONS OF THE SOIL? (Dr. C. Kathir Mahadevan M.A M LIIT Ph.D. - Professor and head, Dept. of comparative Literature -  School of Tamil studies, Madurai - Kamarajar University, Madurai.)
http://aringarparvai.blogspot.com/2018/07/who-are-sons-of-soil.html

குற்றச்சாற்று - 3
--------xx--------
இவர்களுடைய DNA பிராமணர்களுடன் ஒத்துப்போகிறது.

நமது பதில்:
--------xx-------

பிராமணர்கள் என்பது சங்க காலத்தில் ஒரு இனம் கிடையாது.  பிராமண மந்திரம் கற்றுக்கொண்டவர்கள் பிராமணர் என்று அழைத்துக்கொண்டனர். பொதுவாக சமஸ்கிருதத்தில் வழங்கும் ஒரு முக்கியப் பழமொழி, 

“பிறப்பால் அனைவரும், சூத்திரரே, குணத்தினால்தான் பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன்” என்றாகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் அனைவரும் மள்ளர் குடியிலிருந்து தோன்றியவர்கள் என்பது தெளிவு. இங்கு குறிப்பிடகூடிய அந்தணர் என்பவர் இன்றைய பிராமணர் இல்லை என்பதை கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தலாம்.
திருக்குறள் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள்

“அந்தணரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான் “
(குறள் : 30)

என அந்தணரென்னும் பெயர் நீத்தாருக்குரித்தாகக் திருவள்ளுவ நாயனர் கூறியிருக்கின்றார். இதற்குப் 

பரிமேழகரின் விளக்கம்:
x---------x---------x----------x
அந்தணரென்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராகலின் அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து” என்று கூறினர்.

மு.வரதராசன் விளக்கம்:
x--------x---------x----------x
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா விளக்கம்:
x--------x---------x----------x----------x
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

அதேபோல் தொல்காப்பிய மரபிற் சூத்திரத்தில் அந்தணரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனாகின்றது.

”நூலேகரக முக்கோன் மணையே
ஆயுங் காலை யந்தணர்க் குரிய “
(தொல்காப்பிய மரபிற் சூத்திரம்)

அந்தணர் தமிழ் மக்களல்லாத பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும்.

“எறித்தரு கதிர்தாங்கி யெய்திய குடை நீழ
லுறித் தாழ்ந்த கரகமுமுரைசான்ற முக்கோலு
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப் பேவல்செய்மாலைக் கொளைநடை யந்தணீர்.”
(கலி-பாலை, 9 – 1 – 4)

இதன் பொருள்: குடையினால் வெயிலைத் தாங்கி உறியிலே வைத்த தண்ணீர்க் கரகத்தையும், முக்கோலையும் தோளிடத்தே சுமந்து செல்லும் இயல்புடைய அந்தணீர் என்பதாகும். ( ந.சி. கந்தையா பிள்ளை – தமிழர் சரித்திரம், பக். 72)

கபிலர் பாடிய புறநானூறு செயுள் அந்தணர் ஊன் புசிக்கும் இயல்பினர் என காட்டப்பட்டுள்ளது.

“பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும்….. “
(புறம் – 14)

நின்னை பாடும் யாமோ, ஊனும் கறியும், துவையும் சோறும் எடுத்து உண்பதை தவிர, எம் கைகளால் வேறெதுவும் செய்தறியோம் – என்றும்

“அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே…..” 
(புறம் – 113)

ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்து ஊனும் சோறும் வேண்டி வேண்டி அளிப்பவர் சிலர். அத்தகைய வளத்துடன் முன்னர் நீ எமக்கு நட்புடைமையாக விளங்கினையன்றோ. – என்றும் குறிப்பிடுகிறார்.
இச்சான்றுகளால் அந்தணர் என்பது ஒரு சாதி அல்ல என்பதும், அவர்கள் அந்தந்த நாட்டைச்சேர்ந்த முற்றும் துறந்த துறவிகள் என்பதும் தெளிவு. இதை மைய்பிக்கும் விதமாக தேவநேய பாவாணர் அவர்கள்

“ஒரே குடும்பத்தில், ஒருவன் அந்தணனாகவும், ஒருவன் அரசனாகவும், ஒருவன் வணிகனாகவும், ஒருவன் வேளாளனாகவும், ஒருவன் கைத்தொழிலாளியாகவும், ஒருவன் கூலிக்காரனாகவும் பிறக்கலாம்.”

(தேவநேய பாவாணர் – மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை பக். 102 )
என்று கூறியுள்ளார். 

அதேபோல் கோவில் நிலங்களில் வேளாண்தொழில் செய்து அதில் வரக்கூடிய வருவாய்களை பாராமரித்து கோவில் காரியங்களை செய்துவரும் வேளாண் குடியைச் சேர்ந்த அந்தணர்கள் தங்களை சிவபிராமணன் என்றும் அழைத்துக்கொண்டதுடன், காசிவ கோத்திரத்தைச் சேர்ந்தவன் எனவும் கூறிக்கொண்டனர். 

“……………………இக் கோயிற் காணியுடைய சிவபிராமணன்
காசிவ கோத்திரத்துத் திருநட்டன்
அகத்தீஸ்வரமுடையானான
சித்திரமேழி பட்டனேன்.”
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண்: 144/2004, 145 / 2004, 146 / 2004, 147 / 2004, 149 / 2004 மற்றும் 152 / 2004),

“………. காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்டன் அகத்தீஸ்வரமுடையானான சித்திரமேழிக் கோன்…..   ” 
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 140 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),

இவ்வாறு அந்தணர்களான  உழவர்கள் தங்களை சிவபிராமணன் என்று அழைத்துக் கொண்டவர்கள்  பிற்காலத்தில் தனித்த குடிகளாக மாற்றம் பெற்றனர். இவர்களே தமிழ் பிராமணர்களாக இருக்கக்கூடும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். மூவேந்தர் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியிருந்த காலத்தில் தங்கள் குடிகளை எல்லா இடத்திலும் குடியமர்த்தியிருப்பர். இவ்வாறு குடியமர்த்தப் பட்டவர்களில் போர்குடிகள் க்ஷத்திரியகுருமி, க்ஷத்திரியகுடுமி, பட்டேல், கடையர் என்று அழைத்துக் கொள்கின்றனர். அதேபோல் அவர்களுடன் குடியமர்த்தப்பட்ட அந்தணர்களே இன்று வடக்கில் உள்ள பிராமணர்களில் ஒரு பிரிவிணராக இருக்க கூடும் அல்லது அவர்களுடன் கலந்திருக்க கூடும். இதன் பொருட்டே  ஒரு சில பிராமணர்களின் DNA மள்ளர் சமூகத்தின் DNA யுடன் ஒத்துப்போக காரணமாக அமைகிறது எனக் கருதலாம்.

குற்றச்சாற்று – 4
--------xx----------
பள்ளர்கள் கீழ்சாதி, அடிமைகளாக இருந்தனர் 

நமது பதில்:
--------xx-------
மூவேந்தர்கள் ஆட்சி முடிவுபெற்று பிற்க்காலத்தில் நடந்த அரசு மாற்றத்தால் பல சமூகங்கள் அடிமைகளாக இருந்துள்ளன. அதில் மள்ளர் சமூகமும் விதிவிளக்கல்ல. அதேபோல் இன்றைய வெள்ளாளர்களும் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். சில கல்வெட்டுகளும் ஓலைச் சுவடிகளும் இன்றைய வெள்ளாளர்கள் அடிமையாக இருந்ததாக குறிப்பிடுகிறன அவற்றை கீழே காண்போம்.
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்புறக் குமுதத்தில் உள்ள கி.பி.1201 ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு ஒன்று "திருப்பாம்புரத்திலுள்ள வெள்ளாளன் ஒருவன் காசுக்கு மூன்று நாழி நெல்விற்கும் கொடிய பஞ்சமுள்ள நேரத்தில் தன்னையும், தன் மகள் இருவரையும் மட அடிமைகளாக முப்பத்திரண்டு காசுக்கு விற்ற செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது."

கல்வெட்டு வாசகம்:
x-------x---------x--------x
1."ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும் கொண்டருளிய சீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 23-வது உடையார் திருப்பாம்புரமுடையார்கு இவ்வூர்

2.இருக்கும் வெள்ளாளன் காட்டுடையான் ஊர் இருக்க அமண... ஆண்டியேன் காலம் பொல்லாக் காலமாய் காசுக்கு முன்னாழி நெல்லு விற்று நானும் என் மக்களும் இ. வடி சம்...பப்புக்க

3.வர் இ..ம் இவனே முது கண்ணாக இன்னாயனாற்கு நானும் என் மகள் அரியாளும் இவள் தங்கை நம்பியாண்டியும் மட அடிமை ஆக ஆதிசண்டேசுர தேவர் சீ பாதத்து நீர் வார்த்து குடுத்தது சீபண்டாரத்து கொண்ட 

4.காசு 32.

(நன்னிலம் கல்வெட்டுகள், முதல் தொகுதி, தொடர் எண் : 157/1977 - தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு)

இதுபோல் பல கல்வெட்டுகளில் சோழர் காலம் தொடங்கி ஆங்கிலேயர் காலத்திலும் வெள்ளாளார்கள் அடிமைகளாக இருந்துள்ளதர்க்கான சான்றுகளை கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

குற்றச்சாட்டு – 5
--------xx----------
கவுண்டர் முதலி , பிள்ளை என்பது பட்டம் வேளாளர் / வெள்ளாளர் என்பது சாதி

நமது பதில்:
--------xx-------
நான் இதற்க்கு பல முறை பதில் கூறிவிட்டேன். சங்க காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை வேளாளர் / வெள்ளாளர் என்பது ஒரு சாதியை குறிக்கவில்லை. அது ஒரு பண்பு பெயராகத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்பெயரை பல சமூகத்தவர்களும் பயன் படுத்தியுள்ளனர் என்பதற்க்கான சான்றுகளை கீழே கொடுத்துள்ளேன்.

1.கி.பி. 13-ம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜராஜ சோழர் காலத்தில் சித்தூர் மாவட்டம் காலகஸ்த்தியில் உள்ள காலகஸ்தீஸ்வரர் கோயில் கிழக்கு சுவரில் எழுதப்பட்ட கல்வெட்டு

“விண்ணமாலையில வெள்ளாளரில் சின்னம நாயக்கன் மகன் சூரப்ப நாயக்கன் “

(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, No. 469. மற்றும் A R. E. 172 / 1903).

2.கோயமுத்தூர் மாவட்டம் அவினாசியில் ஸ்ரீ குலசேகர தேவர் காலத்திய கல்வெட்டு

.“பூந்துறை நாட்டில் ஆரங்கூரில் வெள்ளாழன் காரிகளில் சக்தி நாயக்கனென் உடையார் அவினாசியாளுடைய நாயனார்க்கு வைத்த சந்தியா தீபம்”

தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 26, எண் 209 மற்றும் A R. E. 197 / 1909).

3.கி.பி. 13-ம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜராஜ சோழர் காலத்தில் சித்தூர் மாவட்டம் காலகஸ்த்தியில் உள்ள காலகஸ்தீஸ்வரர் கோயில் கிழக்கு சுவரில் எழுதப்பட்ட மற்றொரு கல்வெட்டு

"வெள்ளாளரில் வடுகமிரட்டி மகன் வடுகமிரட்டி திருநுந்தா விளக்குக்கு விட்ட ஆடு " 

(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, No. 466. மற்றும் A R. E. 169 / 1903).

4.நிர்மணியில் வசிக்கும் வெள்ளாளந் செவ்வாயரில் காவலஞ் செம்பள்ளி என்பவன் நிர்மணியில் மேலை வசலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க ஓர் அச்சு பணம் இக்கோயில் சிவப்பிராமணரிடம் கொடுத்து தீபமெரிய வழிவகைச் செய்துள்ளான்

(திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 105 / 2010), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),

5.ஸ்ரீவீரசங்காத சதுவேதிமங்கலத்தில் விபியத்திருந்து வாழும் வெள்ளாளன் செம்(பள்ளி விக்)கிரமசோழ பல்லவரையன் மணவாட்டி

(திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 135 / 2010), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),

6.கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரையில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் சந்திவிளக்கு எரிப்பதற்கு வெள்ளாழன் பைய்யரில் செம்மண் காவனேன் என்பவன் பணம் கொடை அளித்த செய்தியைக் கூறுகின்றது

“வடபரிசார நாட்டு இடிக ரையில் வெள்ளாழன் பைய்யரில் செம்மண் காவனேன்”

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, த.நா.அ. தொல்லியல்துறை தொடர் எண் : 159/2004)

7.கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரையில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் சந்திவிளக்கு எரிப்பதற்கு வெள்ளாளன் பையரில் பறையன் என்பவன் 10 பணம் கொடையாக அளித்த செய்தியைக் கூறுகின்றது.

"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" 

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 144/2004)

8.கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரையில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் சந்திவிளக்கு எரிப்பதற்கு வெள்ளாழன்பைய்யரில் சடையன் நேரியான் பறைய என்பவன் பணம் கொடை அளித்த செய்தியைக் கூறுகின்றது

"வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" 

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் : 146/2004,)

9.கோவன்புத்தூர் சங்கீசுரமுடையார் கோவிலுக்கு வடபரிசார நாட்டைச் சேர்ந்த வெள்ளாளன் புல்லி கூட்டத்தைச் சேர்ந்த பறையன் பறையனான நாட்டுக் காமுண்டன் என்பான் மாலை விளக்கு ஒன்று எரிக்க ஓரச்சுக்காசு கொடையாக அளித்தது பற்றியது.

“வடபரிசாரநாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு”

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, த.நா.அ. தொல்லியல்துறை தொடர் எண் : 94/2004)
10.பத்ம வேளாள ஜாதி வைஷ்ணவ மதம் தேக்கு மர வியாபாரம் கா. முனுசாமி நாயுடு காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் இருக்கும் கி.பி. 1901 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-

“….. சென்னை இராயபுரம் பத்ம வேளாள ஜாதி வைஷ்ணவ மதம் தேக்குமர வியாபாரம் கா - முனுசாமி நாயுடு..”

11. கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த மரியாதைக்குரிய புலவர் செ. இராசு தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் அவர்கள் தான் வெளியிட்ட கொங்கு வேளாளர் செப்பேடு பட்டையங்கள் என்ற நூலில் கன்னிவாடிக் கண்ணகுல செப்பு பட்டையத்தை வெளியிட்டுள்ளார். அதில் கொங்கு வேளாளர்களும், பள்ளி வேளாளர்களும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அச்செப்பேடு கூறுகிறது. மேலும் பட்டையத்தில் பள்ளி வேளாளர் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவற்றிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன்.

கன்னிவாடி செப்பேடு:
x--------x---------x---------x
“…………..பள்ளிவேளாளர் நடந்த விவரத்தை சொன்னார். இந்த செய்தியை கேட்டு ராயர் நீ விடுதிக்கு போவென்று அனுப்பி விட்டு தீர்க்கயோசித்து மகுடமுடி சூடிய மும்முடி நல்ல தம்பி மன்றடியாருக்கு திருமுகம் எழுதி அனுப்பினார்.அப்போது பட்டாக்காரரும் மற்ற பங்களிகளும் கூடி யோசித்து பள்ளி வேளாளனுக்கு………….”

“………..திருமுகம் ராயர் பார்த்துக்கொண்டு முன்பின் நடந்தபடி நடந்துகொள்ளுங்கள் என்று மறுபடியும் திருமுகம் அனுப்பிவிட்டு ராயர் பள்ளி வேளாளனுக்கு சொல்லுகிறார். போய் உறவின்முறை சம்பந்தமாய் பெண் கேள் என்றார். அதனால் பள்ளி வேளாளன் கன்னிவாடி வந்து பட்டாகாரரை கண்டு பெண் கேட்டார் ………."

(கன்னிவாடி செப்பேடு - புலவர் செ. இராசு தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் - கொங்கு வேளாளர் செப்பேடு பட்டையங்கள். பக்.102 – 110)

12.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தானத்தில் உள்ள இரண்டாம் ஆதித்ய சோழன் (கி.பி.964) காலத்திய கல்வெட்டில் “வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும்” நிலக் கொடை அளித்ததை  தெரிவிக்கிறது . இக்கல்வெட்டில் “வெள்ளாளன் குடும்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது அக்காலத்தில் குடும்பு பார்த்தவர்களுக்கு  (குடும்பர்களுக்கு) வெள்ளாளன் என்ற சிறப்பு பெயர் இருந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

கல்வெட்டு வாசகம்:
x-------x-------x--------x
1.ஸ்வஸ்தி ஸ்ரீ கோ பரகேசரி பந்மற்க்கு யாண்டு 8 ஆவது வடகரை ப்ரஹ்மதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ மூலஸ்தானத்து பரமஸ்வாமிக்கு திருவாராதனைக்கும் நெல்லுக்குமாக இக்கோயிலில் உகச்சன் முன்னூற்றுவன் ஆன தனி ஆள் இரண்டு உகச்சன் கயிலாயன் தனியாள் மூன்று 

2.கூத்த பெருமாளுக்கு உச்சம் போது இரு நாழி திருவமிதுக்கு அன்னபலி ... யுரி சூ நாடுரிக்கு ஆதித்தவர்க்குமாக குடுத்த நிலமாவது 

3.தேவதானம் ... முகைக்குடி ஸ்ரீ மூலஸ்தான நல்லூரில் நிவந்ததுக்கும் 

4.லில் வெதரன் மனை வெள்ளாள னானதுதம்பாடி உடையான் குடும்பில் எழுமாவரை யாழ ஸ்ரீகோயிலில் சிவப்ராஹ்மணர்க்கு நிபந்தமாக குடுத்த நிலம் ஒன்றேய் எழுமாவரையும் சந்த ராதித்யவற் இ ஸ்ரீ கோயிலில் ஸ்ரீபலி நிச்சல்படி எட்டடிக் கொண்டு கொட்டுவதற்க்கு பொன்

5.க்கும் நெல்லுக்குமாக இ ஸ்ரீ கோயிலில் உகச்சன் முன்னூற்றுவன் ஆன தன் ஆள் இரண்டு உகச்சன் கயிலாய உகச்சன் கீழனரிகத்துடி ஆள் மூன்றுக்கு நிபந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும் ஸ்ரீகோயில்

(ஆவணம்-21, பக்கம்-15, தமிழகத் தொல்லியல் கழகம் தஞ்சாவூர்)

இதுபோல் பல கல்வெட்டு சான்றுகளை என்னால் காட்டமுடியும்.

குற்றச்சாட்டு – 6
--------xx---------
புலியங்குலத்தில் உள்ள கோயில் சோழியர் கட்டியதாக உள்ளது. ஆனால் அவற்றை இன்று தேவேந்திர குல சோழிய வேளாளர் என மாற்றிவிட்டனர்.

நமது பதில்:
--------xx-------
இவ்வாறு கூறுவதன் மூலம். இவர் தமிழ வரலாறு தெரியாத குழந்தை என்றே கூற வேண்டும். ஏனெனில் சோழியன் என்பது ஒரு பட்டம் அப்பட்டத்தை பல சமூங்களும் பயன்படுத்தியுள்ளனர். கி.பி. 1891 – ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தேவேந்திர குல வேளாளர்களில் சுமார் 50000 பேர் தங்களை  சோழியன் என பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாற்றை வைத்துள்ள நபரின் தாத்தா பிறப்பதற்க்கு முன்பே அதே பதியில் சோழியன் என்ற பட்டத்தை தேவேந்திர குல வேளாளர்கள் 20000 பேர் பயன்படுத்தியுள்ளதற்க்கு சான்று காட்டியுள்ளேன் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

திருச்சி:
----xx----
கடையன் – 16528
சோழியன் – 22963
தேவேந்திரன் - 27073
தொண்டைமான் - 49231

தஞ்சாவூர்:
------xx------      
சோழியன் -  361 
தேவேந்திரன் - 20162

கோயம்புத்தூர்:
--------xx---------      
சோழியன் - 18894
தேவேந்திரன் - 8371

சேலம்: 
----xx----
சோழியன்  - 6552
தேவேந்திரன் -18474 

[H.A. Stuart 1891 Census Madras Presidency vol. XIII Page 247]

குற்றச்சாற்று – 7
--------xx-------
தொல்காப்பியம்  காலம் முதல் பயன்படுத்திவரும் வேளாளர் என்ற ஒரு குடிப் பெயரை திருடுகின்றனர்.

நமது பதில்:
-------xx-------
எனக்குத் தெரிந்து தொல்காப்பியத்தில் வேளாளர் என்ற சொல் இடம்பெறவே இல்லை. அதற்க்கு மாறாக வேளாண் மாந்தர் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது 
இல்லென மொழிப்பிறவகை நிகழ்ச்சி.”
(தொல். பொருள் மரபியல் - 81) 

என்று தொல்காப்பியச் சூத்திரத்தில் வேளாண் மாந்தர்க்கு உழுதுண்ணும் தொழிலைத்தவிர வேறு சிறந்த தொழில் இல்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் கி.பி.14 - ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்க்கு உரை எழுதிய நச்சினார்கினியர் அக்கால நிலையை மனதில் வைத்துக்கொண்டு தொல்காப்பியத்தில் உழுதுண்போர், உழுவித்துண்போர் என இருவை வேளாளர் இருந்தனர் எனக் கூறியுள்ளார். இது தவறான செயல் என பல அறிஞர்களும் கருத்து கூறியுள்ளனர். மேலும் சங்க இலக்கியங்களில் உழுதுண்போர், உழுவித்துண்போர் என இரு இனம் இருந்ததாக எந்த குறிப்பு இல்லை. 

தொல்காப்பியம் கூறும் வேளாண் மாந்தர் யார்? என்பதை நல்ல அறிஞர்களிடம் கேட்டு தெரிந்துவும். 

ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி
x---------x--------x---------x---------x
இசை வேளாளர்க்கும் – (கங்கை குல வெள்ளாளர்)இன்றைய வேளாளர்க்கும் DNA ஒத்துப்போகிறது என்று கூறியதன் மூலம் நீங்கள் இருவரும் ஒரே குடி என்பது உறுதியாகிறது.

இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் தேவேந்திர குல வேளாளர் வேறு கங்கை குல வெள்ளாளர் வேறு. ஆதலால் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூக வரலாற்றை நன்றாக படிக்கவும்.

இவன்
Pandyan Mallar.

Post a Comment

Previous Post Next Post