தேவேந்திர சக்கரவர்த்தியும் சத்ரியர் பட்டமும்

தேவேந்திர சக்கரவர்த்தியும் சத்ரியர் பட்டமும் 
பகுதி – 7

சத்ரியர் என்ற பட்டம் ஒரு சமூகத்திற்க்கு மட்டும்தான் இருப்பது போல தொடர்ந்து  கூறிவருகிறார்கள். இச்செய்தி தவறு என்றும், மேலும் பள்ளர்களுக்கு 'சத்ரியர் பட்டமும் அதற்க்கு மேலான சக்கரவர்த்தி,’ பட்டமும் உண்டு என்பதற்கு ஆதாரமான  பல கல்வெட்டுக்கள் சான்றுகளை உள்ளன.

பள்ளர்கள் 'சத்ரியர், சக்கரவர்த்தி,’ என்பதற்கு ஆதாரமான கல்வெட்டுக்கள்:

1.தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் இருவப்பபுரம் பெரும்படைச் சாத்தன் கோயில் கல்வெட்டு.(கி.பி.1815) (பழங்காசு காலாண்டிதழ் ஏப்ரல் 2003.1/385 , சீதக்காதி தெரு காட்டூர், திருச்சி) கல்வெட்டுச் செய்தி
கோயில் பூசாரி பாறை சுப்பக்குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி, 'ஸத்திரிய ஆழ்வார்' இருளக் குடும்பன்.

2.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் எடக்கல் மலை குகைக் கல்வெட்டு.(இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கை 1897 எண் 120-123, E. HULTSCZH) "விஸ்ணுவர்ம்ம குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித" (விஸ்ணு வர்மனின் குடும்பர் குலம் வளர எழுதியது) இங்கு 'வர்மன்' என்பது "சத்ரியன்" என்பதைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
( இந்தியாவில் OBC List – ல் உள்ள சாதிகளில் க்ஷத்திரியர் பிரிவில் உள்ள சாதியான க்ஷத்திரிய குருமி ( குடும்பன் ) உட்பிரிவுகள் க்ஷத்திரிய குருமி, க்ஷத்திரிய குடுமி, வர்மன், பட்டேல், கடையர்,  )

3.கல்வெட்டு வாசகம் (வரி 57- 64)

--------(வரி 57 – 60)கோப்பரகேரிபன்மரான உடையார் ஶ்ரீராஜேந்திர தேவற்கு 30- அவது -------------------
------------(வரி 64) இத்தேவற்கு ஶ்ரீ காரியம் பார்க்கின்ற சந்திரன் தாநதொங்கனான கடாரங்கொண்ட சோழ மாயிலாட்டி ………………….. கின்ற “சத்திரிய மல்லத்(ர்) தெரிந்த வலங்கை வேளைக்காறறில் பெருமான் சென்னியும் திருக்குடக்கில் மூலபருடையர்க்காக (ஶ்ரீகோயில்) வாரியம் செய்கின்ற கவிணியன் வாசுதேவன் சேத்தனும் காசயவன் இராமதேவநாராயணனும்”……………………..
              தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி - 6 எண் – 33

4. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கல்வெட்டு (தெ.க. 8/178, 8/179 கி.பி. 1098) நிலம் விலை முடுக்கப்பட்ட செய்தியை கூறுகையில்.
 கீழக்கோட்டையாளன் கலங்காத கண்ட நல்லூர் தேவன் தொங்கனான மாளவ தேவேந்திரப்ப அரையன் – சக்கரவர்த்தி மல்லனான அஞ்சாத கங்கராயன்.

5. உத்திரமேரூர் கல்வெட்டு - 1 
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்

இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக “தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீவீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர்” ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட

6. உத்திரமேரூர் கல்வெட்டு - 2
இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக “தேவேந்திரன் சக்ரவர்த்தி” பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா

7.  க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119)

8. பழனி செப்புப் பட்டயத்தின் 
பள்ளு சாதியின் உட்பிரிவுகள்
வரி 174 - 180
அரச பள்ளற்
தேவேந்திர பள்ளன்,
சோழியப் பள்ளன், 
பாண்டியப் பள்ளன்,

வரி 187 – 191
அரச பள்ளற்,

9. நத்தம் கோயில் செப்பு பட்டயம்

பள்ளு சாதியின் உட்பிரிவுகள்
அரச பள்ளற்
தேவேந்திர பள்ளன்,
சோழியப் பள்ளன், 
பாண்டியப் பள்ளன்,
வன்னியப் பள்ளன்,

10. மானூர் மள்ளர், ஆசாரிமார் செப்பேடு

திருப்பாசத்தி அரச குடும்பன்
தேவேந்திர குடும்பன்
பாண்டிய பள்ளு
சோழிய பள்ளு

( தொடரும் )

Post a Comment

Previous Post Next Post