சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தேவேந்திர குல வேளாளர் சமூக சட்டமன்ற உறுப்பினர்கள் :
திரு எஸ்.கே.பழியா குடும்பர் மற்றும் திரு எம்.பி. பெரியசாமி மூப்பனார் இருவரும் தேவேந்திர குல வேளாளர் சமூக சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களாவர்.
திரு எஸ்.கே.பழியா குடும்பர் :
திரு எஸ். கே. பழியா குடும்பர் , பாண்டியர் இவர் 1896 ஆம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி மாவட்டம் இன்றைய தென்காசி மாவட்டத்தில் ,சங்கரன்கோவில் வட்டம், சிவகிரி ஜமீன் எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரி எனும் ஊரில் பிறந்தவர். இவர் 1927 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவர். இவர் மெட்ராஸ் மாகாண கோயில் பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரு எம்.பி. பெரியசாமி மூப்பனார் :
திரு எம். பி. பெரியசாமி மூப்பனார் ,
சோழர் மரபில் வந்த திரு எம். பி. பெரியசாமி மூப்பனார் அவர்கள் ஜீலை 25 ,1909 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், மோகனூர்(இன்று சேலத்தில் இருந்து தனியாக பிரிக்கபட்ட நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர்) எனும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை பெயர் பழநியப்ப மூப்பனார். இவர் மதிப்பிற்குரிய தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர். 1939 ஆம் ஆண்டு ஆங்கில அரசுக்கு எதிராக கீழ்படியாமை ( ஒத்துழையாமை) நிகழ்விற்காக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேவேந்திர குல இளைஞர் மாநாட்டின் வட்டாரத் தலைவராகவும், 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் தேவேந்திர குல இளைஞர் அணி செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்.
மேலும் அரிசன் நல்வாழ்வு அமைப்பின் தலைவராகவும்,துணைத் தலைவராகவும் இருந்தவர். அரிசன் மக்களின் கல்வி, மற்றும் வேளாண்மை முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர்.இவரின் குடும்ப உறுப்பினர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அவ்வமைப்பில் பணியாற்றினர். இவர் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலின் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
1930-1933 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் அமைப்பை வழி நடத்தியவர். அதன் பின்னே எஸ்சி பட்டியலில் சேர்க்கப்பட்ட பிறகு அரிசன் நல்வாழ்வு அமைப்பில் இணைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்
நாகை MP எஸ்.ஜி.முருகையன் வயற்காரர் :
சோழர் மரபில் வழிவந்த திருநாகை MP எஸ்.ஜி.முருகையன் வயற்காரர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும், 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் அந்த பகுதியில் விவாசயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, நில பிரபுகளுக்கு எதிராக சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். எனவே, அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்கினார். இவர் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.