"மறவர்" என்ற சொல் சாதி பெயரா ? இன்றய மறவர் என்போர் யார்?

"மறவர்" என்ற சொல் சாதி பெயரா ? இன்றய மறவர் என்போர் யார்? 

1. மறவர் என்ற சொல் பற்றி டாக்டர் கதிர்வேல் கூறுவது:
     சங்க இலக்கியத்தில் மறம், மறவர் என்ற சொற்கள் பயன்படுத்தி இருப்பது உண்மையே. ஆனால், அது முறையே வீரத்தையும், வீரரையும் சுட்டப் பயன்பட்டதேயன்றி, மறவர் என்ற இனம் அல்லது மரபைச் சுட்டவில்லை. (மறவர் வரலாறு, டாக்டர் கதிர்வேல்,பக்கம் 16)

2. மறவர் என்பதற்கு பிங்கல நிகண்டு (3941) 
 ‘வேடர் தம் பெயரும் வீரருமாவர் எனப்பொருள் கூறுகிறது.
 வேடர் என்பவர் ‘அறம் செய்யின் மறம் கெடும் என்ற கோட்பாடுடன் ஆறலைத்தல் தொழில் செய்து வாழ்ந்த எயினரைக் குறிக்கும். இவர்களே வன்கண் மறவர், வன் கண் ஆடவர் என்றும், கூளியர் என்றும் சங்க இலக்கியங்களில் காட்டப்படுகின்றனர். இவர்களுக்கும், தற்காலத்தில் மறவர் என்று சொல்லக்கூடிய இனத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
(எ.கா) துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் (நற்றினை 33:6)
      வருநர்ப் பார்க்கும் வங்கண் ஆடவர் (குறுந்தொகை 274:4)
      கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் (குறுந்தொகை 331:3)
      குரங்கன்னபுன் குறுங்கூளியர் (புறநானூறு 136:12)
வீரர் என்ற வகையில் ‘மறவர் என்ற சொல் படைமறவரையும் மற்றும் படைத்தலைவரையும் குறிக்கும் ஒரு பண்புப் பெயராகும்.படைமறவர் என்றால் அது மள்ளர்குடியினரைக் குறிப்பதாக அமைகிறது.
      எம்.சீனிவாச அய்யங்கார் பள்ளர் பற்றிக் கூறுவதாவது: ‘பள்ளர் என்பது சரியாய் மள்ளர் என்று உச்சரிக்கப்பட வேண்டும். அவர் பாண்டியர் படைமறவர் ஆவார்’ (M.Srinivasa ayyangar, Tamil studies, page 106)'

‘மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் ( அகம் 27:8)  
படைத்தலைவர் என்ற வகையில் இது சேர, சோழ மற்றும் பாண்டியப் படைத்தலைவர்களைக் குறித்தது.
(எ.கா) ‘திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன் (புறம் 179:5)
இந்த மறவன் நாலைக் கிழவன் நாகன்.
‘இழை அணி யானைச் சோழர் மறவன் ( அகம் 326:9)
இவன் பொருநர் கிழவன் பழையன்.
‘வசை இல் வெம்போர் வானவன் மறவன் (அகம் 143:10)
இந்த மறவன் சேரர் படைத்தலைவன் பிட்டன்.
மேலே சொல்லப்பட்ட படைத்தலைவர்கள் அனைவரும் மள்ளர் குடியைச் சார்ந்தவர்கள். இந்த மறவர் என்போர் யாரும் தற்கால மறவர் குடியைச் சார்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால், கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரைத் தமிழகத்தில் மறவர் என்ற இனம் கிடையாது.(Noboru karashima ‘A concordance of the names in the chola inscriptions’-1979)

3. கி.பி 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருவிளையாடற் புராணத்தில் மறவர் என்பது வேட்டுவராகவும், மள்ளர் என்பது போர்மறவராகவும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. (திருவிளையாடற் புராணம்,பழியஞ்சின படலம்) 

4. இடைக்காலமான 13ஆம் நூற்றாண்டு வரை மறவர் என்ற இனம் இல்லை என்றபோது, அதற்கு பல யுகங்கள் முந்தியதாகக் கூறப்படும் இராமன் காலத்தில் ‘மறவர் என்ற இனம் பற்றிச் சொல்லப்படுவதில் அர்த்தம் இல்லை. அதேபோன்றே குகன் கதையும்.

எட்கர் தர்ஸ்டன் மறவர் பற்றிக் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
   ‘சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரிவினரில் மறவர் ஆரம்பத்திலிருந்தே திருடுவதைக் குலத்தொழிலாக நடத்தி வருவதாகக் கண்டுள்ளனர் (எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்திய குலங்களும் குடிகளும்’ தொகுதி 5, பக்கம் 29)'

5. ‘இந்திரன், அகலிகை இணைவால் ‘மறவர் இனம் தோன்றவில்லை என்பது உண்மை. ஏனெனில்,அதற்கு ஆதாரம் கிடையாது.

6. டாக்டர் எம்.எஸ்.கோவிந்தசாமி கி.பி 15-16 ஆம் நூற்றண்டுகளில் தெலுங்கு நூல்களில் பேசப்படும்லம்பகர்ணா என்பவரே மறவர் என்கிறார் (Dr.M.S.Govindasamy, The role of the feudafories in the later chola history)

7. மறவர் இனத்தைச் சார்ந்த தினகரன் என்பவர் மறவர்கள் ஆந்திரப் பகுதியிலுள்ள கிழுவை நாட்டிலிருந்து வந்ததாக தமது மறவர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

8. இராமநாதபுரம் சேதுபதி மகாமறவன் என அழைக்கப்பட்டான். அவன் தெலுங்கு மொழியை ஆதரித்தான்.

9. சேதுபதி மன்னர்கள் தங்களைப் பற்றிய மெய்கீர்த்திச் செய்திகளில் தம்மை ‘மகாமண்டலேஸ்வரன் என்றும் ‘ஆரியர் மானம் காத்தான் எனவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இது அவர்களைப் பற்றிய செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மகாமண்டலேஸ்வரன் என்பது விசயநகர மன்னர்களைக் குறிக்கும். ஆரியர் என்பது வடுகரைக் குறிக்கும்.

10. சேதுபதிகள் தம்மை ‘மூவராய கண்டன் என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். மூவராய கண்டன் என்பது தமிழ் வேந்தர்களுக்கு பகைவன் என்பதாகும்.

   இன்று தம்மை 'மறவர்' என்ற அழைத்து கொள்ளும் முக்குல மறவர் என்போர் யார், அவர் பூர்வீகம் என்ன என்பதும், 'போர்குடி மறவர்' யார் என்பதும் விளங்குகிறது அல்லவா...?

Post a Comment

Previous Post Next Post