நாகை MP எஸ்.ஜி.முருகையன் தேவேந்திரர் :
தஞ்சை மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும், 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் எஸ்.ஜி.முருகையன் ஆவார். அவர் அந்த பகுதியில் விவாசயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, நில பிரபுகளுக்கு எதிராக சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். எனவே, அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்கினார். இவர் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவருடைய குடும்பம் புகைப்படம்( சித்தமல்லி ஜி,முருகையன் MP, அவர்களின் குடும்பத்தினர் இதில்தான் SGM லெனின்,SGM ரமேஷ், பூபேஷ் அவர்களின் சகோதரிகள் போன்றவர்கள். )
தியாகி.S.G முருகையன்தேவேந்திரர். M.P.அவர்களின் வாழ்வும்..பணியும்...
1.இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் இந்தியாவின் முதல் பட்டியல் வகுப்பினர்..(தேவேந்திரர்) பிரிவில் முதல் கோட்டூர் ஒன்றிய பெருந்த்தலை வர். 2.மன்னார்குடி முத்துதுப்பேட்டைக்கு உழைக்கும் மக்களின் உழைப்பை ஒன்று திரட்டி ஓரே நாளில் அரசின் உதவியின்றி பாமணி ஆற்றின் கீழ் கரையை அகலப்படுத்தி பேருந்து செல்வதற்கு சாலை அமைத்த சிரமதான சிற்பி...
3.ஆதிச்சபுரம்..வேதபுரம் புதிய சாலையை மக்களின் மூலம் சிரமதான பாணியில் உருவாக்கி தந்தவர்.
4.வீராக்கி..விக்கிரபாண்டியம் சாலையை மக்களால் உருவாக்கி தந்தவர்.
5.கமலாபுரம்..கண்கொடுத்தவனிதம்..சாலையை சிரமதான பணியின் மூலம் உருவாக்கித் தந்தவர்..
6.கொரடாச்சேரி..கப்பலுடயான் ..சாலையை சிரமதான பணியின் மூலம் உருவாக்கித் தந்தவர்.. 7.சித்த மருந்தகங்கள் பெருகவாழ்ந்தான்.. விக்கிரபாண்டியம்..திருக்களார்...ஆகிய ஊர்களில் அமைத்துக் கொடுத்தவர்...
8.கால்நடை மருத்துவ மனைகள் கோட்டூரிலும்...பெருகவாழ்ந்தானிலும் அமைத்து கொடுத்தவர்.9.S.G.முருகையன்தேவேந்திரர்.M.P.அவர்களின் முயற்சியில் பாம்புக்கானி, பெருமள்கோயில், நத்தம், எளவனூர், சொத்திரியம், கண்டமங்கலம்..பெரியகுருவாடி. மகாராசபுரம்..பாலையூர்..நத்தம்..தெற்குதென்பரை. காரைத்திடல். போன்ற பல ஊர்களில் தொடக்கப்பள்ளிகளை உருவாக்கி தந்தவர்..
10..கோட்டூர் ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை நிர்மானித்தவரும் இவரே..
11.விக்கிரபாண்டியம்.இராதாநரசிம்மபுரம்..கேட்டூர்..பெருகவாழ்ந்தான்..மழவராயநல்லூர்..களப்பால். புத்தகரம்..ஆகிய ஊர்களில் உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்கி தந்தார்..
12..நாகை நாடாளுமன்றத்தின் முதல் பட்டியல்வகுப்பினர் (தேவேந்திரர்) S.G.M அவர்கள்தான்..
13.நாகையில் இயங்காமல் கிடந்த துறைமுகத்தை உடனே,ஜனதிபதி நீலம் சஞ்சீவிரெட்டி அவர்களை சந்தித்து நாகை துறைமுகத்தை இயங்க வைத்தார்..கப்பல் போக்குவரத்து தொடங்க வைத்தார். (வருடம்1977..1978).
14.அயல் நாடுகளுக்கு செல்ல அதிக அளவில் கையொப்பமிட்ட M.P.யும் இவரே..
S.G.முருகையன் என்ற அந்த மாவீரன் மள்ளர்குல மாணிக்கம் இறக்கும் போது அவரிடம் இருந்த பெட்டியில்..100 ருபாய் பணம்..மக்கள் அவருக்கு கொடுத்த மனுக்கள்...ஒரு கதர்வேட்டி..சட்டை..குழந்தைகளுக்கு வாங்கிய மில்க்பிக்கீஸ் பிஸ்கெட்...லெட்டர் பேடு..பாராளுமன்ற உறுப்பினர் அட்டை...மூக்குக்கண்ணாடி..பாராளுமன்ற உறுப்பினர் முத்திரை ...சில்லரைகாசுகள்...மட்டுமே இருந்தன..எந்த வங்கிகணக்கிலும் சேமிப்பு இல்லை... இவ்வாறு மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே உயிர் நீத்த இத்தியாக செம்மல்ஐ போற்றுவோம்.. அவர் விட்டு சென்ற பாதையில் அனைவரும் தொடர்ந்து பயணிப்போம்.
ஜனவரி 6 ஆண்டுதோறும் சித்தமல்லியில் வீரவணக்க நாள் நடைபெறுகிறது.